ஹோம் /நியூஸ் /இந்தியா /

சோனிய தலைமையிலான ராஜீவ் காந்தி அறக்கட்டளை உரிமம் ரத்து - மத்திய உள்துறை அமைச்சகம்

சோனிய தலைமையிலான ராஜீவ் காந்தி அறக்கட்டளை உரிமம் ரத்து - மத்திய உள்துறை அமைச்சகம்

சோனியா காந்தி - ராகுல் காந்தி

சோனியா காந்தி - ராகுல் காந்தி

கடந்த 2005ஆம் ஆண்டு முதல், 2009ஆம் ஆண்டு வரை இந்த இரண்டு அறக்கட்டளைகளும் சீனாவிடம் இருந்து நன்கொடை வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  சோனியா காந்தி தலைமையிலான ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.

  கடந்த 2020ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி பவுண்டேசன் மற்றும் ராஜீவ் காந்தி சாரிட்டபிள் டிரஸ்ட் ஆகிய இரண்டு அறக்கட்டளை மீது ஜே.பி. நட்டா குற்றம்சாட்டினார். 2005ஆம் ஆண்டு முதல், 2009ஆம் ஆண்டு வரை இந்த இரண்டு அறக்கட்டளைகளும் சீனாவிடம் இருந்து நன்கொடை வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்தியா - சீனா தடையற்ற வர்த்த்க ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு இந்த நிதி லஞ்சமாக கொடுக்கப்பட்டதா என பாஜக கேள்வி விடுத்தது.

  மேலும் தலைமறைவான வைர வியாபாரி மெகுல் கோச்சி நன்கொடைகள் அளித்ததாகவும், பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ராஜீவ் காந்தி பவுண்டேஷனுக்கு பணம் திருப்பி விடப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

  இதையும் படிக்க : ராமரின் சக்தி இந்தியாவை புதிய உச்சத்துக்கு அழைத்துச் செல்கிறது - பிரதமர் மோடி உரை

  இதை தொடர்ந்து வெளிநாட்டு ஒழுங்குமுறை சட்ட விதிமுறைகள் மீறப்பட்டதா?, சட்டவிரோத பணபறிமாற்றம் நடந்ததா?, என்பதை ஆய்வு செய்ய அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்தது.

  இந்த குழுவின் விசாரணையை தொடர்ந்து ராஜீவ் காந்தி பவுண்டேஷன், மற்றும் ராஜீவ் காந்தி சாரிட்டபிள் ட்ரஸ்ட் ஆகிய 2 அறக்கட்டளையின் வெளி நாட்டு உரிமங்களை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்தது.

  இந்த அறக்கட்டளைகளின் அறங்காவளர்களாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் பி.சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Congress, Home Minister Amit shah, RahulGandhi, Rajiv gandhi, Sonia Gandhi