Home /News /national /

ரூ.80,000 மஃப்ளர் அணிகிறார் அமித் ஷா.. ராகுலுக்கு ஆதரவாக அசோக் கெலாட் பதிலடி

ரூ.80,000 மஃப்ளர் அணிகிறார் அமித் ஷா.. ராகுலுக்கு ஆதரவாக அசோக் கெலாட் பதிலடி

அமித் ஷாவுக்கு அசோக் கெலாட் பதிலடி

அமித் ஷாவுக்கு அசோக் கெலாட் பதிலடி

ராகுல் காந்தி அணிந்திருந்த டி-ஷர்ட்டை விமர்சித்த அமித் ஷாவுக்கு அசோக் கெலாட் பதிலடி தந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rajasthan, India
    காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி தரும் விதமாக ராகுல் காந்தி “பாரத் ஜோடோ யாத்ரா” என அழைக்கப்படும் இந்திய ஒற்றுமை பயணத்தை செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த பாத யாத்திரையானது மொத்தம் 3,500 கி.மீ. தூரம் 150 நாட்கள் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் 4 நாள்கள் 59 கிமீ தூரம் யாத்திரை மேற்கொண்ட நிலையில், தற்போது அவர் கேரளாவில் உள்ளார்.

    ராகுல் காந்தியின் இந்த யாத்திரையை விமர்சித்து பாஜக ட்விட்டரில் வெளியிட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாஜக அந்த பதிவில், யாத்திரையில் கலந்து கொண்ட ராகுல் காந்தி அணிந்துள்ள டி-ஷர்ட்டின் விலை ரூ.41,000. நாடு இதை பார்த்துக்கொண்டு இருக்கிறது என்றது. அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித் ஷாவும் இந்த டி-ஷர்ட் விவகாரத்தை கையில் எடுத்து, ராகுல் காந்தி வெளிநாட்டில் தயாரித்த டி-ஷர்ட்டை அணிந்து கொண்டு யாத்திரை செல்கிறார் என விமர்சித்தார். ராகுலின் உடை குறித்து பாஜக விமர்சனம் செய்ததற்கு காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறது.

    அமித் ஷாவின் விமர்சனத்திற்கு பதிலடி தரும் விதமாக ராஜஸ்தான் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் கருத்து தெரிவித்துள்ளார். அசோக் கெலாட் கூறியதாவது, "பாரத் ஜோடோ யத்திரைக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை பார்த்து பாஜக ஆட்டம் கண்டுள்ளது. அதனால் தான் பிரதமர், உள்துறை அமைச்சர் என அனைவரும் தங்கள் வேலையை விட்டுவிட்டு ராகுல் காந்தியை தாக்கி வருகின்றனர்.

    இதையும் படிங்க: கேரளாவில் 18 நாள், உத்தரப் பிரதேசத்தில் வெறும் 2 நாள்.. இது தான் பாஜகவை எதிர்ப்பதா? ராகுலுக்கு மார்க்சிஸ்ட் கேள்வி

    ராகுல் காந்தியின் டி-ஷர்ட்டை எல்லாம் விமர்சித்து அரசியல் செய்கின்றனர். ஆனால் பாஜகவை சேர்ந்தவர்கள் ரூ.2.5 லட்சத்திற்கு கண்ணாடி அணிகின்றனர். அமித் ஷாவே ரூ.80,000 மதிப்பிலான மஃப்ளரை அணிந்துள்ளார். ராகுலுக்கு கிடைத்த வரவேற்பை கண்டு அஞ்சி பாஜக இவ்வாறு பேசுகிறது" என குற்றஞ்சாட்டியுள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Home Minister Amit shah, Rahul gandhi

    அடுத்த செய்தி