டெல்லி வன்முறை குறித்து முதன்முறையாக மௌனம் கலைத்த அமித்ஷா..!

டெல்லி வன்முறை குறித்து முதன்முறையாக மௌனம் கலைத்த அமித்ஷா..!
அமித்ஷா
  • Share this:
டெல்லி வன்முறைக்கு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்றப் போராட்டம் வன்முறைக் களமாக மாறியது. பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய வன்முறை இரண்டு நாள்களுக்கு நீடித்தது. வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லி காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி வன்முறையை காவல் அதிகாரிகள் கட்டுப்படுத்த தவறிவிட்டனர் என்றும் இதற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகவேண்டுமென எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


இதனிடையே டெல்லி வன்முறை குறித்து அமித்ஷா கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து எதிர்கட்சிகள் வதந்திகளை கிளப்பி வருகின்றனர். இந்த சட்டத்தினால் இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் கட்டாயம் ஏற்படும் என்ற பொய் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தான் பொதுமக்கள் கலவரத்தை ஏற்படுத்த தூண்டுகின்றனர்.

இந்த சட்டத்தின் மூலமாக எந்தவொரு இந்திய நாட்டை சேர்ந்த முஸ்லிம்களும் பாதிக்கப்படமாட்டார்கள் என்றார். மேலும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 70 ஆண்டுகளாக சிக்கலில் இருந்த ஜம்மு-காஷ்மீர் பிரச்னையை தீர்த்து வைத்தது. காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கிய அங்கு அமைதியான சூழ்நிலை நிலவி வருகிறது“ என்றார்.
First published: February 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்