• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ”ஒரே நாடு ஒரே அட்டை” - அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய குடியுரிமை அட்டை வழங்க மத்திய அரசு திட்டம்

”ஒரே நாடு ஒரே அட்டை” - அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய குடியுரிமை அட்டை வழங்க மத்திய அரசு திட்டம்

உள்துறை அமைச்சர் அமித்ஷா

உள்துறை அமைச்சர் அமித்ஷா

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஆதார், வாக்காளர் அடையாள அட்டை எண், பான் கார்டு உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய குடியுரிமை அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

    மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்திற்கு புதிய கட்டடம் திறப்பு விழா டெல்லியில் இன்று நடந்தது. உள்துறை அமைச்சர் அமித்ஷா புதிய கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், 2021-ம் ஆண்டு நடக்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புக்காகவும், தேசிய குடியுரிமை பதிவேடு தயாரிக்கவும் ரூ. 12 ஆயிரம் கோடி செலவிடப்பட உள்ளதாக தெரிவித்தார்.

    பேப்பருக்குப் பதிலாக மொபைல் ஆப் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் அமித்ஷா கூறினார்.

    மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை எண், பான் கார்டு உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய குடியுரிமை அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தனது பேச்சில் அமித்ஷா குறிப்பிட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: