2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக வங்கிகளுக்கு 15 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் ஜனவரி மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது வரவு - செலவு கணக்கு, பணத்தை டெபாசிட் செய்வது, எடுப்பது, லோன் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகளை நாடி வருகின்றனர். எனினும் வங்கி பணி நாட்கள் எது என்று தெரியாமல் விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று திரும்புவதும் நடைபெறுகிறது. இதனால், வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்து வருகிறது.
அந்த வகையில் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக வங்கிகளுக்கு 15 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளும் அடங்கும். அதுபோலவே புத்தாண்டு, பொங்கல், குடியரசுத் தினம் உள்ளிட்ட நாட்களும் அதில் வருகின்றன.
மேலும், ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி, மாநிலத்தைப் பொறுத்து சில மாநில விடுமுறைகளுடன் அனைத்து பொது விடுமுறை நாட்களிலும் வங்கிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு விடுமுறை நாட்களை அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்கின்றன. அதன்படி எந்த தேதியில் எந்த மாநிலங்களுக்கு விடுமுறை என்பதை கீழ்காணும் பட்டியலில் தெரிந்துகொள்ளலாம்
வங்கி விடுமுறை நாட்கள் விபரம் பின்வருமாறு:-
ஜனவரி 1- புத்தாண்டு
ஜனவரி 2 - மிசோரம் மாநிலத்தில் விடுமுறை
ஜனவரி 3 - மணிப்பூர் மாநிலத்திற்கு விடுமுறை
ஜனவரி 4 - மணிப்பூர் மாநிலத்திற்கு விடுமுறை
ஜனவரி 8 - ஞாயிறு
ஜனவரி 12 - மேற்கு வங்கத்தில் விடுமுறை (விவேகானந்தரின் பிறந்தநாள்)
ஜனவரி 14 - இரண்டாவது சனி
ஜனவரி 15 - ஞாயிறு
ஜனவரி 16 - திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17 - உழவர் திருநாள்
ஜனவரி 22 - ஞாயிறு
ஜனவரி 23; மேற்கு வங்கத்தில் விடுமுறை (நேதாஜி பிறந்தநாள்)
ஜனவரி 26 - குடியரசு தினம்
ஜனவரி 28; நான்காவது சனிக் கிழமை
ஜனவரி 29 - ஞாயிறு
முதல் மற்றும் 3வது சனிக்கிழமைகளில் வங்கிகள் வழக்கம் போல இயங்கும்.
மேற்கண்ட நாள்களில் வங்கிகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் இணைய வங்கி சேவைகள் வழக்கம்போல் கிடைக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டாம் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank, Bank holiday