உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவருக்கு அவரின் கணவரின் காரணமாக ஹெச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் கணவர் கடந்த டிசம்பர் மாதம் நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்த துக்கத்தை விசாரிக்க அந்த நபரின் அண்ணன், அவரது குடும்பத்தினருடன் பிலிபித்துக்கு வந்துள்ளனர். தனது கணவரால் தனக்கும் இப்படி ஒரு கொடிய நோய் ஏற்பட்டு அவலமான சூழல் ஏற்பட்டுள்ளதே என்ற ஆத்திரம் அப்பெண்ணுக்கு பழிவாங்கும் உணர்வாக உருவெடுத்துள்ளது.
தனக்கு நேர்ந்த அவலத்திற்கு கணவரின் அண்ணன் குடும்பத்தினரை பழிவாங்க வேண்டும் என முடிவெடுத்த அந்த பெண், துக்கம் விசாரிக்க வந்த அண்ணணின் 15 வயது மகனை தனது வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என மிரட்டியும் உள்ளார். சிறுவன் தனது சொந்த ஊரான உத்தம் சிங் நகருக்கு சென்ற நிலையில், கடந்த மார்ச் 30ஆம் தேதி அச்சிறுவனின் ஊருக்குச் சென்று மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை வெளியே தெரிவிக்கக் கூடாது என பயந்துபோன சிறுவனை அப்பெண் மிரட்டிக்கொண்டிருக்கும்போது சிறுவனின் தாயார் அதை பார்த்துள்ளார்.
பிரம்மா மகளை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று பாடம் நடத்திய பேராசிரியர்- எதிர்ப்பைத் தொடர்ந்து பணியிடை நீக்கம்
அப்போது சிறுவன் தனக்கு நேர்ந்த கொடூரத்தை தாயிடம் விவரிக்க அவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். உடனடியாக அருகேயுள்ள மகளிர் காவல்நிலையத்தில் சிறுவனின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதையடுத்து 23 வயதான பெண்ணை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பழிவாங்கும் நோக்கத்தில் சிறுவனை அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். தனக்கு நேர்ந்த அவலத்திற்காக ஒரு பெண் ஒன்றுமறியாத சிறுவனுக்கு இந்தக் கொடூரத்தை ஏற்படுத்திய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.