தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுவதன் பின்னணியை அறிந்துகொள்வோம்!

மத்திய அரசு 1961-ம் ஆண்டு பிதன் சந்திரா ராய்க்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது.

news18
Updated: July 1, 2019, 9:53 AM IST
தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுவதன் பின்னணியை அறிந்துகொள்வோம்!
மருத்துவர் பிதன் சந்திரா ராய்
news18
Updated: July 1, 2019, 9:53 AM IST
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் முதல் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுவதன் பின்னணியை பார்க்கலாம்.

தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படும் ஜூலை முதல் தேதி, மேற்கு வங்க மாநிலத்தின் இரண்டாவது முதல்வராக பதவிவகித்த மருத்துவர் பிதன் சந்திரா ராயின் பிறந்த நாள் ஆகும். 1882-ம் ஆண்டு பிறந்த இவர் நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவராக இருந்துள்ளார்.

மருத்துவராக பணியாற்றிய இவர், காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றினார். 1948-ம் ஆண்டு ஜனவரி 14 முதல் 1962 ஜூலை 1-ம் தேதி வரை 14 ஆண்டுகள் மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக திறம்பட செயல்பட்ட ராய், தொலைநோக்கு பார்வையுடன் பல திட்டங்களை நிறைவேற்றினார்.

மருத்துவத்துறையில் திறம்பட பணியாற்றி பல்வேறு சாதனைகளை படைத்ததுடன், தன்னலம் பாராது பிறர்நலன் கருதி மகத்தான மருத்துவச் சேவைகள் பல செய்ததால், மத்திய அரசு 1961-ம் ஆண்டு பிதன் சந்திரா ராய்க்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது.

1962-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி தன்னுடைய 80 வயதில் பிதன் சந்திரா ராய் காலமானார். அவரது பிறந்ததேதியும், மறைந்த தேதியும் ஒரே நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிதன் சந்திரா ராயின் தன்னலமற்ற சேவையை நினைவு கூறும் வகையில், அவருடைய பிறந்த மற்றும் மறைந்த நாளான ஜுலை 1-ஐ `தேசிய மருத்துவர் தினமாக’ அனுசரித்து வருகிறது. இதே நாளில், தொடர்ந்து மருத்துவத் துறையில் சிறப்பாக சேவையாற்றி வருபவர்களுக்கு அவர் பெயரில் `டாக்டர் பி.சி.ராய்’ விருது வழங்கப்பட்டு வருகிறது.

First published: July 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...