வரலாற்றுத் தவறு 1992-ஆம் ஆண்டில் சரிசெய்யப்பட்டது.. - பாபர் மசூதி இடிப்பு குறித்து பிரகாஷ் ஜவடேகர் சர்ச்சைப் பேச்சு..

வரலாற்றுத் தவறு 1992-ஆம் ஆண்டில் சரிசெய்யப்பட்டது.. - பாபர் மசூதி இடிப்பு குறித்து பிரகாஷ் ஜவடேகர் சர்ச்சைப் பேச்சு..

பிரகாஷ் ஜவடேகர்

”ராமர் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் சொந்தமாக இல்லாமல், மொத்த நாட்டுக்கே பெருமையாகியிருக்கிறார். பிற மதங்களும் ராமர் கோவில் கட்டுவதை ஆதரிக்கின்றன” என்று பேசியுள்ளார்.

 • Share this:
  டெல்லி பாஜக அலுவலகத்தில் நடந்த சந்திப்பில், ராமர் கோவில் கட்டுவதற்காக நிதி வழங்கியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “பாபர் இந்தியாவுக்கு படையெடுத்து வந்தபோது, ராமர் கோவிலை ஏன் இடிப்பதற்கு தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு நாட்டின் ஆன்மா ராமர் கோவிலில் இருப்பது தெரியும். டிசம்பர் 6-ஆம் தேதி, 1992-ஆம் ஆண்டு, ஒரு வரலாற்று தவறு சரிசெய்யப்பட்டது” என்று சர்ச்சையை எழுப்பும் விதமாக பேசியுள்ளார்.

  "கோவிலின் உருவம் சிதைக்கப்பட்டது. அது மசூதியே இல்லை. ஏனெனில் அங்கு வழிபாடு இல்லை. வழிபாடு இல்லாத இடம் தொழுவதற்கான இடமல்ல. நான் அதற்கான நேரடி சாட்சி. நான் யுவமோர்ச்சாவில் இயங்கிவந்தேன். டிசம்பர் 6, 1992-ஆம் ஆண்டு நான் அயோத்தியில் இருந்தேன். மில்லியன்கணக்கானவர்களில் நானும் ஒருவன். அடுத்த நாள், வரலாற்று தவறு திருத்தப்பட்டதை நாடே பார்த்தது”  என்றார்.

  ”ராமர் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் சொந்தமாக இல்லாமல், மொத்த நாட்டுக்கே பெருமையாகியிருக்கிறார். பிற மதங்களும் ராமர் கோவில் கட்டுவதை ஆதரிக்கின்றன” என்று பேசியுள்ளார்.
  Published by:Gunavathy
  First published: