ஹோம் /நியூஸ் /இந்தியா /

வஞ்சகத்தால் வெற்றி பெற்ற காங்கிரஸ்! - யோகி ஆதித்யநாத்

வஞ்சகத்தால் வெற்றி பெற்ற காங்கிரஸ்! - யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

ஒருபோதும் நாங்கள் வெற்றியின் போது திளைப்பதில்லை. அதேபோல, தோல்வியின்போது வாக்கு இயந்திரத்தின்மீது பழிபோடுவதில்லை என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

காங்கிரஸ் வஞ்சகத்தால் வெற்றி பெற்றுள்ளது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ஐந்து மாநிலத் தேர்தல்களில் பா.ஜ.க வசம் இருந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களை  கைப்பற்றியது. மினி நாடாளுமன்றத் தேர்தல் என்று இந்த ஐந்து மாநிலத் தேர்தல் கருதப்பட்ட நிலையில், இது பா.ஜ.கவுக்கு மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இன்று பாட்னாவிலுள்ள மகாவீர் கோயிலில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘வெற்றியும் தோல்வியும் ஜனநாயக நடைமுறையின் அங்கம். இரண்டையும் பணிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். பஜ்ரங் பாலி சாதி குறித்து நான் எதுவும் தவறாகப் பேசவில்லை. ஆன்மீக முறையில் ஹனுமனின் இருப்பிடம் குறித்து மட்டுமே தெரிவித்தேன். எல்லா சாதியைச் சேர்ந்த மக்களிடமும் ஆன்மீகம் இருக்கிறது.

காங்கிரஸ் வஞ்சகத்தால் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தோல்வியை எங்களது கட்சி பணிவுடன் ஏற்கிறது. காங்கிரஸின் பொய்கள் விரைவில் அவிழும். அது பின்னாட்களில் நடைபெறவுள்ள போட்டியை எளிமையாக்கும். ஒருபோதும் நாங்கள் வெற்றியின் போது திளைப்பதில்லை. அதேபோல, தோல்வியின்போது வாக்கு இயந்திரத்தின்மீது பழிபோடுவதில்லை. அவர்கள் வெற்றி பெறும்போது, வாக்கு இயந்திரங்களை வழிபடத் தொடங்குகின்றனர்’ என்று தெரிவித்தார்.

ராஜஸ்தானில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஹனுமாரை தலித் என்று குறிப்பிட்டு யோகி ஆதித்யநாத் பேசினார். அவருடைய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராஜஸ்தானில் மட்டுமல்லாமல், அவர் ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேசத்திலும் எதிர்ப்பு கிளம்பியது. ஹனுமன் தலித் என்றால், ஹனுமார் கோயில்களை தலித் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று போராட்டம் எழுந்தது.

தேர்தல் தோல்விக்கு, ஹனுமன் குறித்த உங்களுடைய பேச்சு காரணமா என்ற கேள்விக்கு, அது ஒன்றும் காரணமில்லை என்று கூறி மறுத்துவிட்டார். இந்த 5 மாநிலத் தேர்தல்களில் யோகி ஆதித்யநாத் தீவிரமாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டார். தேர்தல் நேரங்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர், தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களிலும் 74 பேரணிகளில் பங்கேற்று வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see:

First published:

Tags: 5 State Election, Yogi adityanath