போலீஸ் ஷூவை துடைத்து முத்தமிட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி...!

News18

 • Last Updated :
 • Share this:
  ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.பி, போலீஸ்காரர் ஒருவரின் ஷூவை முத்தமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

  கடந்த புதன்கிழமையன்று தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்பியான ஜேசி திவாகர் ரெட்டி, காவல்துறை ஆளுங்கட்சியின் இசைக்கு ஏற்றபடி நடனமாடுவதாகவும், தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்களை தங்களது காலணிகளை முத்தமிடச் செய்வோம் என்றும் கூறியிருந்தார்.

  இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பியும், முன்னாள் காவல்துறை அதிகாரியுமான கோரண்ட்லா மாதவ், காவலர் ஒருவரின் ஷூவை துடைத்து அதற்கு முத்தமிட்டார்.  அப்போது பேசிய அவர் போலீஸாரின் காலணிகள் இந்த நாட்டைக் காக்கும் பாதுகாப்புப் படையின் ஆயுதங்களில் ஒன்றாக இருப்பதாகக் குறிப்பிட்டதோடு, முதல்வர் அனுமதி அளித்தால் தான் மீண்டும் காவல்துறையில் சேர்ந்து நாட்டைக் காக்க பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார்.

  Also See...

   
  Published by:Sankar
  First published: