Home /News /national /

ஜின்னா டவரில் தேசியக் கொடி ஏற்ற முயற்சி - ஆந்திராவில் பதற்றம்

ஜின்னா டவரில் தேசியக் கொடி ஏற்ற முயற்சி - ஆந்திராவில் பதற்றம்

Jinnah tower

Jinnah tower

Jinnah Tower: ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஜின்னா சர்க்கிள் குடியரசு இந்தியாவில் இருக்கிறதா, இல்லையா என்பதை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர் - சுனில் தியோதர்

    இந்து அமைப்பினர் குண்டூரில் உள்ள ஜின்னா டவரில் தேசியக்கொடியை ஏற்ற முயற்சி செய்ததால் பதற்றம் ஏற்பட்டது. தேசியக் கொடியை ஏற்ற முயற்சி செய்த இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

    ஆந்திர மாநிலம் குண்டூரில் ஜின்னா டவர் அமைந்துள்ளது. இந்திய பிரிவினைக்கு காரணமாக இருந்த முகமது அலி ஜின்னா பெயரில் அமைந்திருக்கும் இந்த டவருக்கு, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பெயரை சூட்ட வேண்டும் என பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜின்னா டவரில் தேசியக் கொடி ஏற்றுவோம் என இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் அறிவித்திருந்தனர். இதனையடுத்து அந்த டவருக்கு போலீசாரால் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் இரும்பால் ஆன பாதுகாப்பு வேலியையும் நகர நிர்வாகம் அமைத்திருந்தது.

    Also read:  சகல வசதிகளுடன் உல்லாசமாக ஜெயில் வாழ்க்கை.. லஞ்சம் கொடுத்த கிரிமினலுக்கு விஐபி ட்ரீட்மெண்ட்...!!

    இந்த நிலையில், குடியரசு தினமான நேற்று காலை, இந்து வாகினி அமைப்பைச் சேர்ந்தவர்கள் ‘பாரத் மாதா கி ஜே’ என கோஷமிட்டவாறே திரளாக வந்து ஜின்னா டவர் மீது தேசியக் கொடியை ஏற்ற முயற்சி செய்தனர். அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும், இந்து அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



    பின்னர் போராட்டக்காரர்களை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்று சில மணி நேரங்களுக்கு பின்னர் விடுவித்தனர். இச்சம்பவம் குறித்து பாஜக தேசிய செயலாளர் சுனில் தியோதர் கூறுகையில், இந்து வாகினி அமைப்பினர் அங்கு தேசியக் கொடியை ஏற்றப்போவதாக ஏற்கனவே மாவட்ட எஸ்.பிக்கு தெரிவித்திருந்த போதிலும், போலீசாரிடம் அனுமதி வாங்கவில்லை என கூறி அவர்களை கைது செய்தது துரதிர்ஷ்டவசமானது. ஜின்னா டவரின் பெயரை மாற்றும் வரையில் போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

    Also read:   ரயிலுக்கு தீ வைப்பு: வன்முறையை தூண்டிவிட்டதாக பிரபல யூடியூபர் மீது வழக்கு!!

    மேலும் சுனில் தியொதர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில்,ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை டேக் செய்து, ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஜின்னா சர்க்கிள் குடியரசு இந்தியாவில் இருக்கிறதா, இல்லையா என்பதை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர் என பதிவிட்டுள்ளார்.

    ஏற்கனவே ஜின்னா டவரின் பெயரை மாற்ற வேண்டும் என வைத்த கோரிக்கையை குண்டூர் மேயர் நிராகரித்தார். 1966ம் ஆண்டே ஹமித் மினார் என இதற்கு பெயர் மாற்றும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இது இந்து - முஸ்லிம் ஒற்றுமையை பறைசாற்றும் சின்னம் என தெரிவித்தார்.
    Published by:Arun
    First published:

    Tags: Andhra Pradesh, Republic day

    அடுத்த செய்தி