Home /News /national /

தந்தையின் கடைசி ஆசை.. ரூ1.5 கோடி மதிப்பிலான இடத்தை இஸ்லாமியர்களுக்கு தானமாக வழங்கிய இந்து சகோதரிகள்

தந்தையின் கடைசி ஆசை.. ரூ1.5 கோடி மதிப்பிலான இடத்தை இஸ்லாமியர்களுக்கு தானமாக வழங்கிய இந்து சகோதரிகள்

20 ஆண்டுகளுக்கு முன் மறைந்த தந்தையின் விருப்பத்தை இரு மகள் தற்போது நிறைவேற்றி மத நல்லிணக்திற்கு எடுத்துக்காட்டாய் திகழ்கின்றனர்.

20 ஆண்டுகளுக்கு முன் மறைந்த தந்தையின் விருப்பத்தை இரு மகள் தற்போது நிறைவேற்றி மத நல்லிணக்திற்கு எடுத்துக்காட்டாய் திகழ்கின்றனர்.

20 ஆண்டுகளுக்கு முன் மறைந்த தந்தையின் விருப்பத்தை இரு மகள் தற்போது நிறைவேற்றி மத நல்லிணக்திற்கு எடுத்துக்காட்டாய் திகழ்கின்றனர்.

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் மத ரீதியான மோதல் போக்கு சமீபகாலமாக நிலவிவரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தம்நகர் சிங் மாவட்டம் காசிபூர் பகுதியைச் சேர்ந்தவர் ப்ரஜ்நந்தன் பிரசாத் ரஸ்தோகி. விவசாயியான இவர் 2003ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காலமானார். இவருக்கு சரோஜ் மற்றும் அனிதா என இரு மகள்கள் உள்ளனர்.

    ரஸ்தோகிக்கு தனது நிலத்தின் ஒரு பகுதியை இஸ்லாமியர்கள் தங்கள் வழிபாடு செய்யும் இடமான ஈட்காவுக்கு(Eidgah) வழங்க வேண்டும் என விருப்பம் இருந்துள்ளது. ரஸ்தோகி 20 ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்த நிலையில், இந்த விஷயம் அவரது பிள்ளைகளுக்கு தெரியமாலேயே இருந்துள்ளது. தந்தை வழங்க விருப்பப்பட்ட இடம் இரு மகளுக்கு சொத்தாக சென்றுள்ளது. இந்நிலையில் சமீபத்தில், உறவினர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது தந்தையின் இறுதி விருப்பம் குறித்து மகள்களுக்கு தெரியவந்துள்ளது.

    இதையடுத்து தந்தையின் இறுதி விருப்பத்தை உடனடியாக நிறைவேற்ற மகள்கள் முடிவெடுத்தனர். மகள் சரோஜ் டெல்லியும், இன்னொரு மகள் அனிதா மீரட்டிலும் வசித்துவரும் நிலையில், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக சொந்த கிரமமான காசிபூருக்கு வந்துள்ளனர். காசிபூரில் உள்ள தனது சகோதரரான ராகேஷ் இடம் தங்களின் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். அவரும் சகோதரிகளின் முடிவை உடனடியாக ஏற்றுகொண்டுள்ளார். பின்னர் சகோதரிகள் இருவரும் அங்குள்ள ஈட்கா கமிட்டிக்கு தங்களின் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

    இருவரின் ஈகை குணத்தால் மகிழ்ந்து போன ஈட்கா கமிட்டியைச் சேர்ந்த ஹசின் கான், "இரு சகோதரிகளும் மத நல்லிணக்கத்தின் வாழும் உதாரணம். இவர்களின் சிறந்த உள்ளத்திற்கு நாங்கள் நன்றியுடன் இருப்போம். இரு சகோதரிகளுக்கும் விரைவில் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார். இதையடுத்து, சுமார் 1.5 கோடி மதிப்பிலான இடத்தை, இரு சகோதரிகளும் இஸ்லாமியர்களின் வழிபாடு செய்யும் இடமாக தானம் வழங்கியுள்ளனர்.

    இதையும் படிங்க: ஜெர்மனியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு மோடி.. வைரலாகும் புகைப்படம்

    "தந்தையின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றுவது எங்கள் கடமை. இரு சகோதரிகளின் இந்த செயலால் எங்கள் தந்தையின் ஆன்மா சாந்தி அடையும்" என சகோதரர் ராகேஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Hindus and muslims, Religion

    அடுத்த செய்தி