கோட்சே பிறந்தநாளை கொண்டாடிய ஹிந்து மகாசபா!

போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் சாத்வி பிரக்யா, கோட்சேவை தேசபக்தன் என்று புகழ்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது

news18
Updated: May 19, 2019, 10:42 PM IST
கோட்சே பிறந்தநாளை கொண்டாடிய ஹிந்து மகாசபா!
கோட்சே
news18
Updated: May 19, 2019, 10:42 PM IST
மகாத்மா காந்தி கொலையாளி நாதுராம் கோட்சேவின் பிறந்தநாளை, ஹிந்து மகாசபா அமைப்பு கொண்டாடியுள்ளது.

தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றதால் தூக்கிலிடப்பட்ட நாதுராம் கோட்சே 1910-ம் ஆண்டு புனே அருகே உள்ள பராமதி என்ற கிராமத்தில் மே 19-ம் தேதி பிறந்தவர் ஆவார்.

சமீபத்தில், போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் சாத்வி பிரக்யா, கோட்சேவை தேசபக்தன் என்று புகழ்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர், கண்டனங்கள் அதிகரிக்கவே தனது கருத்தை அவர் பின்வாங்கினார். பிரக்யாவை மன்னிக்கவே முடியாது என்று பிரதமர் மோடியும் கருத்து கூறியிருந்தார்.

இந்த விவகாரம் ஓய்ந்த நிலையில், கோட்சே பிறந்த நாளை மத்தியப்பிரதேசம் மாநிலம் குவாலியரில் ஹிந்து மகாசபையினர் கொண்டாடியுள்ளனர். அந்த அமைப்பின் துணைத்தலைவர் ஜைவீர் பரத்வாஜ், கோட்சேவின் படத்திற்கு ஆரத்தி எடுத்து வழிபட்டதாக கூறியுள்ளார்.

பல பாஜக தலைவர்கள் கோட்சேவை தேசபக்தனாக கருதுவதாகவும், ஆளும் கட்சியாக இருப்பதால் அதனை வெளிக்காட்டிக்கொள்ள மறுப்பதாகவும் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கோட்சேவின் சிலை இந்த அலுவலகத்தில் திறக்கப்பட்டது. பின்னர், மாவட்ட நிர்வாகம் சிலையை பறிமுதல் செய்தது.

இதனை குறிப்பிட்டுள்ள, பரத்வாஜ், “மாவட்ட நிர்வாகம் வரும் நவம்பர் மாதத்துக்குள் சிலையை ஒப்படைக்கவில்லை எனில் வேறு சிலையை அமைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
Loading...
கோட்சே பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு அனுமதி பெறப்பட்டதா என்று போலீசாரிடம் கேள்வி எழுப்பிய நிலையில், “அலுவலகத்தின் சிறிய அறைக்குள் நிகழ்ச்சி நடந்துள்ளது. இதற்கு அனுமதி தேவையில்லை” என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.

First published: May 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...