காந்தி எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் கவலையில்லை: நாங்கள் கோட்சே பக்கம் நிற்கிறோம் - கோட்சே பெயரில் கல்வி மையம் தொடங்கிய இந்து மகா சபை

காந்தி எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் கவலையில்லை: நாங்கள் கோட்சே பக்கம் நிற்கிறோம் - கோட்சே பெயரில் கல்வி மையம் தொடங்கிய இந்து மகா சபை

கோட்சே பெயரில் கல்வி மையம்

மத்திய பிரதேச மாநிலத்தில் நாதுராம் கோட்சேவின் பெயரில் இந்து மகா சபா கல்வி மையத்தை அமைத்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  தேசப் பிதா மகாத்மா காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சேவை தேச பக்தர் என்று இந்து அமைப்புகள் கூறும் நிகழ்வு அவ்வப்போது நடைபெற்றுகொண்டிருக்கிறது. பா.ஜ.க எம்.பியான பிரக்யா தாகூர் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, கோட்சேவை தேச பக்தர் என்று அழைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியும் அதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், மத்தியப் பிரதேசத்தில் இந்து மகா சபா நாதுராம் கோட்சே பெயரில் கல்வி மையத்தை திறந்துள்ளது. இதுகுறித்து தெரிவித்த இந்து மகா சபா துணைத்தலைவர் ஜெய்வீர் பரத்வாஜ், ‘இந்தியப் பிரிவினையின் கண்ணோட்டங்கள் குறித்து இளம் தலைமுறைக்கு இந்தக் கல்வி மையம் கற்றுக்கொடுக்கும். காங்கிரஸ் இந்த நாட்டின் பிரிவினைக்கு காரணமாக இருந்தபோது, இந்து மகா சபா நாட்டு விடுதலைக்கு பங்காற்றிக்கொண்டிருந்தது.

  இந்து மகா சபா இந்திய விடுதலைக்காக தியாகம் செய்தது. நேருவையும் ஜின்னாவையும் பிரதமராக்குவதற்காக காங்கிரஸ் இந்தியாவைப் பிரித்துக்கொண்டிருந்தது. காந்தி எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் அதுகுறித்து கவலையில்லை. கோட்சேவின் செயலுக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்.

  மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் கோட்சே பயிற்சி எடுத்தார். அங்குதான் அவர் துப்பாக்கி வாங்கினார். அதன்பிறகு, அவர் டெல்லிக்குச் சென்றார். அவருடைய முதல்முயற்சி வெற்றி பெறவில்லை. நாங்கள் அப்போதிருந்து சொல்லிக்கொண்டிருக்கிறோம்.. நீங்கள் நாட்டைப் பிரித்தீர்கள். அதற்கான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும். அவர், எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் கவலையில்லை. நாங்கள் கோட்சேவின் பக்கம் நிற்கிறோம்’ என்று தெரிவித்தார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: