Home /News /national /

''ஆங்கிலத்திற்கு மாற்றாக பிறமொழி மாநில மக்கள் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும்'' - அமித் ஷா பேச்சு

''ஆங்கிலத்திற்கு மாற்றாக பிறமொழி மாநில மக்கள் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும்'' - அமித் ஷா பேச்சு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Amit Shah on Hindi | இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும், மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல - அமித்ஷா பேச்சு

    இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்திற்கு தலைமை வகித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது-

    அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும்.

    வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, ​​அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும். பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை இந்தியில் சேர்த்தால் அதற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்படாது.

    இதையும் படிங்க - தேர்தலை குறிவைத்து அமைச்சரவையை கூண்டோடு கலைக்கும் ஜெகன் மோகன் ரெட்டி!

    இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல.

    அமைச்சரவையின் 70 சதவீத செயல் திட்டங்கள் இந்தி மொழியில்தான் தயாரிக்கப்படுகிறது. 9-ம் வகுப்பு வரையில் இந்தி தொடர்பான அடிப்படை அறிவை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். இதேபோன்று இந்தி மொழிப் பயிற்சி, தேர்வுகளுக்கும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

    இதையும் படிங்க - கோவில்களுக்கும் ஒலிபெருக்கி சத்தத்தை கட்டுப்படுத்த நோட்டீஸ்.. கர்நாடகா இமாம் மவுலானா மக்சூத் விளக்கம் 

    8 வடகிழக்கு மாநிலங்களில் இந்தி மொழியை பயிற்றுவிக்க 22 ஆயிரம் இந்தி ஆசிரியர்கள் பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இதை தவிர்த்து 8 வடகிழக்கு மாநிலங்களில், 10-ம் வகுப்பு வரையிலும் இந்தி மொழியை கட்டாயமாக்க மாநில அரசுகள் ஒப்புக் கொண்டுள்ளது.
    இவ்வாறு அமித் ஷா பேசினார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Amit Shah, Hindi

    அடுத்த செய்தி