ஹோம் /நியூஸ் /இந்தியா /

Himanta Biswa Sarma | அசாம் முதலமைச்சராக பதவியேற்றார் ஹிமந்த பிஸ்வ சர்மா

Himanta Biswa Sarma | அசாம் முதலமைச்சராக பதவியேற்றார் ஹிமந்த பிஸ்வ சர்மா

ஹிமந்தா பிஸ்வா சர்மா

ஹிமந்தா பிஸ்வா சர்மா

அசாம் மாநிலத்தின் 15-வது முதல்வராக ஹிமந்த பிஸ்வ சர்மா இன்று பதவியேற்றார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

126 இடங்களை கொண்ட வடகிழக்கு மாநிலமான அசாம் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் பாஜக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக சர்பானந்த சோனாவாலை முன்னிறுத்தி பாஜக வென்றது. தற்போது முதலமைச்சர் வேட்பாளாரை அறிவிக்காமல் பாஜக தேர்தலில் வெற்றி பெற்றது. இதனால், அடுத்த முதலமைச்சராக யார் பொறுப்பேற்பார்கள் என எதிர்பார்ப்பு எழுந்தது. முதலமைச்சர் பதவிக்கு சர்பானந்த சோனாவாலுக்கும், ஹிமந்த பிஸ்வா சர்மாக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 60- சட்டமன்ற உறுப்பினர்களில் 40-க்கும் மேற்பட்டோர் ஹிமந்தாவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதையடுத்து, சர்பானந்த சோனாவல் அசாம் திரும்பியதும் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக ஹிமந்த பிஸ்வ சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்பின் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க ஹிமந்த பிஸ்வ சர்மா உரிமை கோரினார். ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்றனர்.

அசாமில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்களின் ஒருவராக வலம் வந்த ஹிமிந்த பிஸ்வ சர்மா, 2011ம் ஆண்டு முதல் மூன்று முறை எம்.எல்.ஏவாக தேர்வானதுடன், தருண் கோகாய் தலைமையிலான அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தார். 2015ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய இவர், பாஜகவில் இணைந்தார். 2016 சட்டப்பேரவை தேர்தலிலும், கடந்த மக்களவை தேர்தலிலும் பாஜக வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய இவர், வடகிழக்கு ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும் திறம்பட பணியாற்றினார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் மற்றும் கொரோனா கால சவால்களை சமாளிக்க சர்பானந்த சோனாவால் அரசுக்கு உறுதுணையாக இருந்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தீவிர அரசியலில் இருந்து வரும் ஹிமந்த பிஸ்வா சர்மா, நிதித்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளை கையாண்டுள்ளார்.

மேலும் படிக்க... CM Rangasamy: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி!

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Assam, Assam Assembly Election 2021, BJP