ஹோம் /நியூஸ் /இந்தியா /

பஹாரி பசுக்களின் ஜீன்களை பரப்ப திட்டம்! ஹிமாச்சலப்பிரதேச அரசு முடிவு

பஹாரி பசுக்களின் ஜீன்களை பரப்ப திட்டம்! ஹிமாச்சலப்பிரதேச அரசு முடிவு

பஹாரி பசு

பஹாரி பசு

மத்திய அரசுடன் இணைந்து 3 ஆண்டு திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ள ஹிமாச்சலப் பிரதேச அரசு, அதற்காக 4.64 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஆரோக்கியமான பாலைக் கொடுக்கும் பஹாரி பசு இனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ள மாநில அரசு, அந்த பசுக்களின் ஜீன்களை சேகரித்து பாதுகாக்கவும் பராமரிக்கவும் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் பஹாரி பசு இனங்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக குறைந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்ட அம்மாநில அரசு, அந்த பசு இனங்களின் ஜீன்களை சேகரித்து பராமரிக்கவும், பரப்பவும் முடிவு செய்துள்ளது. மத்திய அரசுடன் இணைந்து 3 ஆண்டு திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ள ஹிமாச்சலப் பிரதேச அரசு, அதற்காக 4.64 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

அம்மாநிலத்தின் மொத்த கால்நடைகளில் பஹாரி பசுக்களின் எண்ணிக்கை 41 விழுக்காடு. அந்தப் பசுக்கள் மூலம் 7.46 விழுக்காடு பால் கிடைக்கிறது. மலைப்பாங்கான இடங்களில் நன்கு வளரக்கூடிய இந்த பசு இனம், மேய்ச்சல் நிலங்களுக்கும் ஏற்றவையாக இருக்கின்றன. குறைவான பால் உற்பத்தியைக் கொடுக்கும் பஹாரி பசு, விவசாய வேலைகளுக்கு ஏற்றவையாகவும் இருப்பதால், இது கிராமப்புற பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.

ALSO READ |  ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு நாடு முழுவதும் தடை!

மேலும், இந்த மாட்டில் இருந்து பால், மிகுந்த ஆரோக்கியத்தைக் கொண்டிருக்கிறது. பஹாரி பசுவின் பாலில் A2 பீட்டா-கேசீன் புரதம் மிகுந்து காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், இதய நோய் பாதுகாப்பு, நீரிழிவு நோய் பாதுகாப்பு, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இந்தப் பாலை குடிப்பது மிகவும் சிறந்தது எனத் தெரிவித்துள்ளனர்.

ஹிமாச்சலப் பிரதேச அமைச்சர் கன்வார் பேசும்போது, NBAGR மூலம் பஹாரி இனங்கள் பழங்குடி இனமகா அங்கீகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். பஹாரி பசுக்களை பாதுகாக்க மத்திய அரசுடன் இணைந்து திட்டம் ஒன்றை உருவாக்கியிருப்பதாக தெரிவித்த அவர், ஹிமாச்சலப் பிரதேசத்தின் சீர்மூர் மாவட்டத்தில் 10.9 ஹெக்டேரில் அந்த திட்டம் அமைய உள்ளதாக கூறினார். அங்கு பஹாரி பசுக்களின் அணுமந்தை உருவாக்கப்படும் எனவும் கூறினார். ரியல் பசு மற்றும் காளைகளின் அனைத்து பண்புகளையும் ஒத்திருக்கும் வகையில் அணுமந்தைகள் உருவாக்கப்பட்டு பாதுகாப்படும் என அமைச்சர் கன்வார் கூறினார்.

ALSO READ |  இந்தியா மட்டுமல்ல, ஆகஸ்ட் 15 சுதந்திரமடைந்த 5 நாடுகள்

மேலும், அங்கு மூன்று அதிநவீன கொட்டைகள் அமைத்து 50 வகை நோய்களால் பரிசோதிக்கப்பட்ட 30 பசுக்கள் மற்றும் 20 கன்றுகள் வளர்க்கப்படும் எனவும் கூறினார். கால்நடைகள் அனைத்தும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் எனக் கூறிய அமைச்சர் கன்வார், பசுந்தீவனம் உள்ளிட்டவை தயாரிப்பது குறித்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என கூறியுள்ளார்.

பஹாரி பசு இனங்கள் சிறியதாக இருப்பதால், அதிக பராமரிப்பு செலவும் மற்றும் தீவனம் தேவைப்படாது. இமலாச்சலப் பிரதேச வேளாண் பல்கலைக்கழக கால்நடை மற்றும் நுண்ணுயிரியல், நோய் எதிர்ப்பு துறை தலைவர் சர்வான் குமார் பேசும்போது, பஹாரி பசுவின் பால், ஆரோக்கியமானது எனத் தெரிவித்துள்ளார்.

ALSO READ | ஓணம் பண்டிகை - கேரள மக்களுக்கு பினராயி விஜயன் அறிவுரை

இதில் இருக்கும் A2 பீட்டா-கேசீன் இதயம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு எதிரான பாதுகாப்பை வழங்குவதாகவும் அவர் கூறினார். அதிகளவில் பயன்படுத்தப்படும் ஹோல்ஸ்டீன் மற்றும் ஜெர்சி இன பசுக்களின் பாலில் இந்த புரதம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், பஹாரி இனங்கள் குறைவதை தடுத்து, அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Cow, Cow Market