• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சுற்றுலாப் பயணிகளை வெள்ளை கம்பளம் விரித்து வரவேற்கும் ஹிமாச்சலப் பிரதேசம்

சுற்றுலாப் பயணிகளை வெள்ளை கம்பளம் விரித்து வரவேற்கும் ஹிமாச்சலப் பிரதேசம்

கல்பா - இமாச்சலப் பிரதேசம்

கல்பா - இமாச்சலப் பிரதேசம்

  • Share this:
    ஹிமாச்சலப் பிரதேசத்தில் பனிப்பொழிவுடன் நிலவிவரும் ரம்மியமான சூழலை ரசிக்க சுற்றுலாப் பயணிகள் அங்கு படையெடுத்து வருகின்றனர்.

    கோடைக்காலம் நெருங்கிவரும் நிலையில், ஹிமாச்சலப் பிரதேசத்திலும் அதன் தாக்கம் தெரியத் தொடங்கியுள்ளது. ஆனால், சீசன் முடியும் தருவாயிலும் பனிப்பொழிவைச் சந்தித்துள்ள குலு மற்றும் மணாலி பகுதிகள், சுற்றுலாப் பயணிகளை வெள்ளை கம்பளம் விரித்து வரவேற்கின்றன.

    பரந்து விரிந்து கிடக்கும் மணாலி பள்ளத்தாக்கைக் கண்டு ரசிப்பதற்கும், குளுமையான சூழலை அனுபவிக்கவும் புதுமணத் தம்பதிகளின் வருகை அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கு முதல்முறையாக புதுவித அனுபவத்தை அளிக்க மக்கள் குடும்பத்துடன் வருகின்றனர். இளைஞர்கள் பனிக்கட்டிகளை வீசியெறிந்து கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

    வழக்கம்போல பனி விளையாட்டுகள், சுற்றுலாப் பயணிகளையும், சாகச விரும்பிகளையும் கவரத் தவறவில்லை. குலு பகுதியில் உள்ள சோலாங் பள்ளத்தாக்கிலும் ஒரு ரவுண்ட் அடிக்கும் சுற்றுலா பயணிகள், அங்கு பாராகிளைடிங் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

    காஷ்மீரில் அமர்நாத் பனிலிங்க தரிசனத்தைத் தவறவிட்டீர்களா? அப்படியானால், இங்கு வாருங்கள் என அழைக்கிறது சோலாங் பனிலிங்கம். சோலாங்கில் உருவாகியுள்ள இந்த 25 அடி உயர பனிலிங்கத்தைத் தரிசிக்க தினமும் ஏராளமான பக்தர்கள் குவிந்துவருகின்றனர்.

    இமாச்சலப் பிரதேசத்தில் இறுதிக்கட்ட சீசனை தவறவிடக் கூடாது என்பதற்காக வரும் நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: