ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஆட்சியை தக்கவைக்குமா பாஜக.. மீண்டு(ம்) வருமா காங்கிரஸ் - இமாச்சலத்தில் இன்று வாக்குப்பதிவு

ஆட்சியை தக்கவைக்குமா பாஜக.. மீண்டு(ம்) வருமா காங்கிரஸ் - இமாச்சலத்தில் இன்று வாக்குப்பதிவு

இமாச்சலப் பிரதேசத்தில் இன்று வாக்குப்பதிவு

இமாச்சலப் பிரதேசத்தில் இன்று வாக்குப்பதிவு

இமாசலப் பிரதேசத்தில் 5 ஆண்டுக்கு ஒரு முறை பாஜக, காங்கிரஸ் என மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Himachal Pradesh, India

  இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. மொத்தமுள்ள 68 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 7,884 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய தகவலின் படி இமாச்சல் மாநிலத்தில் மொத்தம் 55.92 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

  மாநிலத்தில் தற்போது முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் பாஜக ஆட்சி உள்ளது. அங்கு 5 ஆண்டுக்கு ஒரு முறை பாஜக, காங்கிரஸ் என மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன. இம்முறை இந்த ட்ரெண்ட்டை மாற்றி மீண்டும் பாஜகவே வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க தீவிர பரப்புரையை மேற்கொண்டது.மாணவிகளுக்கு இலவச சைக்கிள், ஸ்கூட்டர், அரசு வேலைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, இளைஞர்களுக்கு 8 லட்சம் வேலைவாய்ப்பு, மாநிலத்தில் பொது சிவில் சட்டம் போன்ற வாக்குறுதிகளை ஆளும் பாஜக அளித்துள்ளது.

  அதேவேளை காங்கிரஸ் கட்சியும் பிரியங்கா காந்தியை முன்னிறுத்தி தீவிர தேர்தல் பரப்புரையை மேற்கொண்டது. ஆளும் கட்சியின் மீதான அதிருப்தியை அறுவடை செய்து ஆட்சி அமைக்கும் விதமாக பல வாக்குறுதிகளை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. பெண்கள் அனைவருக்கும் மாதம் ரூ.1,500 உதவித் தொகை, பழைய ஓய்வூதிய திட்டம், 2 லட்சம் புதிய வேலைவாய்ப்பு போன்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் வழங்கியுள்ளது.

  இதையும் படிங்க: இட ஒதுக்கீட்டை 77 சதவீதமாக உயர்த்தி மசோதா - ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

  இன்று ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில், வரும் டிசம்பர் 8ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றைக்கே அறிவிக்கப்படுகிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: BJP, Congress, Himachal Pradesh