அஜித் பட பாணியில் பெண்கள் ‘நோ என்றால் நோ-தான்’ என்று கூறி பாலியல் குற்றவாளிக்கு ஜாமீன் மறுத்த நீதிபதி

மாதிரி படம்.

அஜித் வழக்கறிஞராக நடித்த நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் பெண்கள் நோ என்று கூறினால் அது நோ-தான் என்று வாதாடுவார், அதே வசனத்தைக் கூறி இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு ஜாமீன் மறுத்துள்ளார்.

 • Share this:
  அந்த நீதிபதி கூறுகையில், “நோ என்றால் நோ-தான் இந்த எளிமையான வாக்கியத்தைக் கூட ஆண்கள் புரிந்துகொள்ள சிரமப்படுகின்றனர்” என்று கூறி பாலியல் பலாத்கார குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் மறுத்துள்ளார்.

  ஜாமீன் மனுவை நிராகரித்த உயர் நீதிமன்ற நீதிபதி அனுப் சிட்கரா, தனது தீர்ப்பில், “நோ என்றால் நோ என்பது மிகவும் எளிமையான வாக்கியம் இதைக்கூட சில ஆண்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

  நோ என்றால் அது யெஸ் என்பதாகாது, வேண்டாம் என்று பெண்கள் கூறினால் அது வெட்கத்தினால் அல்ல. மேலும் ஒத்துக் கொள்ள என்னை திருப்தி படுத்து என்ற அர்த்தமும் அல்ல. தொடர்ந்து அந்தப் பெண்ணை பின் தொடர்ந்து கொண்டே இருப்பதற்கான அர்த்தமும் அல்ல. நோ என்றால் அது நோ தான். இதைக்கூட சில ஆண்கள் புரிந்து கொள்ள சிரமப்படுகின்றனர்.

  நோ என்ற வார்த்தைக்கு மேல்விளக்கங்கள், நியாயப்பாடுகள் தேவையில்லை. நோ என்றால் அங்கேயே முடிந்து விட்டது அவ்வளவுதான். அத்துடன் ஆண்கள் நிறுத்த வேண்டும் என்று அர்த்தம்.

  இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் தன்னை குற்றம்சாட்டப்பட்டவர் தொடும்போது வேண்டாம் என்று கூறினார் என்றால் அவர் நிறுத்தாமல் தொடர்து தொடுதலில் ஈடுபட்டுள்ளார். நோ என்றால் ஏற்றுக் கொண்டு உடன்படுவதாக அர்த்தமா? அல்லது நாம் இதில் ஈடுபடலாம் என்பதற்கான சிக்னலா? நோ என்றால் வேண்டாம் அவ்வளவுதான்.

  ஒரு ஆண் தொடும்போது தடுக்கவில்லை என்பதோ விருப்பமில்லாமல் இணங்குவதோ புரிந்துணர்வின் அடிப்படையில் பாலியல் நடவடிக்கை நிகழ்ந்ததாகக் கூறுவது அபத்தம். வெளிப்படையாக வேண்டாம் என்று இந்தப் பெண் கூறுகிறார், ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர் நிறுத்தவில்லை. கல்வியில் பாலியல் படிப்பைச் சேர்க்கவில்லை எனில் இந்த சமூகங்களினால் வளர்க்கப்படும் குழந்தைகள் பெண்களை இழிவுபடுத்தவே செய்யும். திரும்பத் திரும்ப இது நிகழ்வதற்கு செக்ஸ் கல்வி இன்மையே காரணம்” என்றார் நீதிபதி.

  குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ் குமார், 26, டிசம்பர் 18, 2020 முதல் காவலில் இருக்கிறார். பாதிக்கப்பட்ட 17 வயது பெண்ணுக்கு தன் வாகனத்தில் லிப்ட் கொடுத்துள்ளார். அப்ப்போது வண்டியை ஆளில்லா இடத்துக்கு ஓட்டிச் சென்று அந்தப் பெண்ணை எதிர்ப்பை மீறி பலவந்தமாக கற்பழித்துள்ளார்.

  இமாச்சலத்தின் சோலான் மாவட்டத்தில் உள்ள ராஜ்கர் பகுதியில் டிசம்பர் 17ம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

  நீதிபதி மேலும் கூறுகையில், “தனக்கு நேர்ந்த கொடுமையை அந்தப் பெண் தன் பெற்றோரிடம் தெரிவித்தது தைரியமான செயல் என்பதும், பிறகு இந்த பலாத்காரத்தை புகார் செய்ததும் பெண்ணின் தைரியத்தைக் காட்டுகிறது என்பதை சொல்லத் தேவையில்லை என்பதோடு சரியானதும் ஆகும்.

  ஆதாரங்களும் இந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை நிரூப்பிக்கிறது. ஆனால் பெண்ணின் உடலில் எந்த ஒரு காயமும் இல்லை. புகாரில் அந்தப் பெண் தான் வேண்டாம் என்று மறுத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ் குமார் அழாதே என்று கூறி சமாதானம் செய்ததாகவும் கூறியுள்ளார், அந்தப் பெண் மீது அவர் பாய்ந்திருந்தாலும் பாய்ந்து வன்கொடுமையில் ஈடுபட்டிருப்பார். இது போன்ற தருணத்தில் யாரும் இல்லாத ஒரு மயான இடத்தில் ஒரு பெண் விருப்பமில்லாமல் உடன்பட்டிருக்கலாம், அது ஏற்றுக் கொண்டு விருப்பத்துடன் ஈடுபட்டதாகாது. அதனால்தான் பெண்ணின் உடலில் காயமில்லை. மேலும் பெண்ணின் உள்ளாடையில் இருந்த விந்து பாதுகாப்பற்ற செக்ஸ் வைத்துக் கொண்டதையும் காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.
  Published by:Muthukumar
  First published: