• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அலகாபாத்தை அடுத்து பெயர் மாறப்போகும் பிரபல சுற்றுலா நகரம்

அலகாபாத்தை அடுத்து பெயர் மாறப்போகும் பிரபல சுற்றுலா நகரம்

சிம்லா நகரம் (கோப்புப்படம்)

சிம்லா நகரம் (கோப்புப்படம்)

  • News18
  • Last Updated :
  • Share this:
    அலகாபாத் நகரத்தின் பெயர் ப்ரயாக்ராஜ் என மாற்றப்பட்டதை அடுத்து இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகராக உள்ள சிம்லாவும் பெயர் மாற இருக்கிறது.

    உத்தரப் பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரமாக இருந்த அலகாபாத், ‘ப்ரயாக்ராஜ்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மொகலாயர்கள் காலத்தில் ப்ரயாக் என்ற பகுதி அலகாபாத் என பெயரிடப்பட்டதாகவும், அது இப்போது மீண்டும் பழைய பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது என மாநில அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், இமாச்சலப்பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவின் பெயரையும் மாற்ற அம்மாநில அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுற்றுலா பிரதேசமாக திகழும் சிம்லாவின் தற்போதைய பெயர் ஆங்கிலேயர்களால் வைக்கப்பட்டது, இது அவர்களின் ஆட்சிக்கான குறியீடாக உள்ளது.

    எனவே, பழைய பெயரான ‘ஷ்யாமலா’ என்று பெயர்மாற்றம் செய்ய வேண்டும் என வலதுசாரி அமைப்புகள் வலியுறுத்தியதை அடுத்து அரசு அதனை பரிசீலித்து வருகிறது.

    மேலும் செய்திகள்..

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: