ஹோம் /நியூஸ் /இந்தியா /

டீசல் விலை உயர்வு... பெட்ரோல் விலை குறைப்பு - இமாச்சல் அரசின் அறிவிப்பு

டீசல் விலை உயர்வு... பெட்ரோல் விலை குறைப்பு - இமாச்சல் அரசின் அறிவிப்பு

டீசல் விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது

டீசல் விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது

டீசல் மீதான வாட் வரி உயர்வைத் தொடர்ந்து, இமாச்சல பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 86 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இமாச்சல பிரதேசத்தில் டீசல் மீதான வாட் வரி லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியும், பெட்ரோல் மீதான வாட் வரியை லிட்டருக்கு 55 பைசா குறைப்பதாகவும் அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே டீசல் மீதான வாட் வரி விலை லிட்டருக்கு ரூ. 4.40- ஆக இருந்த நிலையில் தற்போது ரூ. 7.40-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு கனரக வாகன உரிமையாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதே நேரம், பெட்ரோல் மீதான வாட் வரி குறைப்புக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. டீசல் மீதான வாட் வரி உயர்வைத் தொடர்ந்து, இமாச்சல பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 86 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த மாநில அமைச்சரவை  விரிவாக்கப்பட்ட நிலையில், புதிய அறிவிப்பு அமலுக்கு வந்துள்ளது. அந்த மாநிலத்தில் கடந்த மாதம் முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றார்.

இந்நிலையில்  4 வார இடைவெளிக்கு பிறகு  முன்னாள் முதலமைச்சர் வீர்பத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங் உள்ளிட்ட 7 பேர் புதிதாக பதவியேற்றுக்கொண்டனர். அந்த மாநில அமைச்சரவையின் எண்ணிக்கை தற்போது வரை 9 ஆக உள்ளது. துணை சபாநாயகர் உள்ளிட்ட 3 பதவிகள் இன்னும் காலியாகவே உள்ளன.

இமாச்சல பிரதேச சட்டமன்றத்தை பொருத்தளவில் முதலமைச்சர் உள்பட அனைத்து அமைச்சர்களின் எண்ணிக்கை 12-யை தாண்ட கூடாது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டது.

மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் டீசல் மீதான வாட் வரியை உயர்த்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

First published:

Tags: Himachal Pradesh, Petrol Diesel Price