• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தெய்வ குத்தம், அசுத்தம்- தடைகளை கடந்து பழங்குடிகளுக்கு தடுப்பூசி செலுத்தல்!

தெய்வ குத்தம், அசுத்தம்- தடைகளை கடந்து பழங்குடிகளுக்கு தடுப்பூசி செலுத்தல்!

மலானா கிராம மக்கள்

மலானா கிராம மக்கள்

அனைத்து முடிவுகளும் ஜம்லு ரிசி  தெய்வத்தின் பிரதிநிதிகளாக அறியப்படும்  கர்தார்கள் மூலமே எடுக்கப்படுகிறது. தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக பூசாரிகளான 11 நபர்களிடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்

  • Share this:
    கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி செலுத்துவதை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு தடைகளை கடந்து அதிகாரிகள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

    இமாச்சல் பிரதேசம் போன்ற மலைபாங்கான மாநிலத்துக்கு ஆழமான பள்ளத்தாக்கு,  செங்குத்தான மழைகள், ஆர்ப்பரிக்கும் நீர் வீழ்ச்சிகள், குறுகலான பாதைகள்  போன்றவை பொதுவான தடங்கலாக இருந்தாலும், இங்குள்ள மலானா கிராம மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் இருந்த தடங்கலே வேறு. ஆம், அது அவர்களின் தெய்வம்ஜம்லு ரிஷி தான்.

    இமாச்சல் பிரதேசம் மாநிலம் பார்வதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் தான் மலானா. இங்கு சுமார் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.  இங்கு பயிரிடப்படும் கஞ்சா போன்றவற்றுக்காக சுற்றுலா பயணிகளிடம் மலானா  அறியப்படுகிறது.  உலகின் மிக பழமையான ஜனநாயகமாக உள்ளூர் மக்களால் கருதப்படும் மலானா, 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதில் இமாச்சல் பிரதேசத்திற்கு தடையாகவே இருந்தது.

    தங்களை மிகவும் சுத்தமானவர்களாக கருதிக்கொள்ளும் மலானா கிராம மக்கள், பிறர் தொட்டால் தாங்கள் அசுத்தமானவர்களாக மாறிவிடுவோம் என்று நம்புகின்றனர். வெளிநபர்கள் தங்களையோ, தங்கள் கிராமத்திலுள்ள பொருட்களையோ தொட இவர்கள் அனுமதிப்பதில்லை.  தங்கள் கிராமத்துக்குட்பட்ட சில இடங்களில் சுவர்களை தொட்டால்கூட சுற்றுலா பயணிகளுக்கு அவர்கள் அபராதம் விதிக்கின்றனர்.

    இதையும் படிங்க: இந்தி பேசாத மாநிலங்களின் உறுதிமிக்க தளபதி ஸ்டாலின்: மேற்குவங்கத்தில் எழுந்த குரல்!


    சாலை அமைப்பது,பள்ளி, மருத்துவமனை அமைப்பது போன்ற பணிகளுக்கு அவர்களின் தெய்வமான  ஜம்லு ரிசியிடம் அனுமதி கேட்ட அதிகாரிகள் தொடங்குகின்றனர். எனினும், அவர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள வைப்பது என்பது அத்தனை எளிதாக அதிகாரிகளுக்கு கைக்கூடவில்லை என்று கூறுகிறார் குல்லு மாவட்ட துணை ஆணையர்  அசுதோஷ் கார்க்.



    மூன்றுமணி நேர மலையேற்றத்துக்கு பின்னர் மலானா கிராமத்தை அதிகாரிகள் அடைந்தனர். அங்கு, அனைத்து முடிவுகளும் ஜம்லு ரிசி  தெய்வத்தின் பிரதிநிதிகளாக அறியப்படும்  கர்தார்கள் மூலமே எடுக்கப்படுகிறது. தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக பூசாரிகளான 11 நபர்களிடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பல்வேறு கேள்விகளையும் அவர்கள் எதிர்கொண்டனர்.

    தடுப்பூசி செலுத்திகொண்டால் தாங்கள் அசுத்தமாகி விடுவோம் என்பது அவர்களின் முதல் கவலை.  அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டதை தங்களால் அறிந்துகொள்ள முடியவில்லை என்று கூறும் அசுதோஷ் கார்க்,” எங்களிடம் அவர்கள் இந்தி மொழியில் பேசினர். எனினும் அவர்களின்  உள்ளூர் மொழி கனாஷி ஆகும். இந்த மொழி உலகில் வேறு எங்குமே பேசப்படுவதில்லை.  இதனால் அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை அறிய முடியாது” என்று விளக்கமளித்தார்.

    மேலும் படிங்க: மோடி அலையால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியாது: எடியூரப்பா


    அடுத்ததாக தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என்பது அவர்களின் அடுத்த கவலை.  தங்களுக்காக பொருட்களை தாங்களே தயாரித்துக்கொள்ளும் மலானா கிராம மக்கள் வெளி நபர்கள் தயாரித்த பொருட்களை (தடுப்பூசி) பயன்படுத்தவும் தயங்கினர்.

    இதையடுத்து மூத்த அதிகாரிகள் அனைவரும் சென்று கிராம மக்களை சந்திக்க சென்றதும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருந்தது அவர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியது.  தடுப்பூசி செலுத்திக்கொள்வது நல்லது என்றும் பக்க விளைவுகள் ஏற்படாது என்றும் அதிகாரிகள் அவர்களிடம் எடுத்து கூறியுள்ளனர்.



    இதேபோல், எதிர்காலத்தில் அரசின் நலத் திட்டங்களை பெறவோ, வெளி இடங்களுக்கு செல்லவோ தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற நிலை ஏற்படக்கூடும் என்றும் அதிகாரிகள் கிராம மக்களிடம் எடுத்துக்கூறினர். இறுதியாக சுற்றுலா பயணிகள்  குறித்து அதிகாரிகள் பேசினார்.

    மலானா கிராம மக்களின் பெரும் வருவாய் சுற்றுலா பயணிகளை சார்ந்து உள்ளது. கொரோனா பரவத் தொடங்கியதையடுத்து சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது தடுப்பூசி செலுத்திக்கொண்டால் சுற்றுலா பயணிகளை மீண்டும் அனுமதித்துக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் கூறினர். இதன் பின்னர், தடுப்பூசி செலுத்திக்கொள்ள மலானா கிராம மக்கள் சம்மதம் தெரிவித்தனர்.  இதையடுத்து மூன்றே நாட்களில் அவர்களுக்க் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: