இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் சுக்விந்தர் சுகு தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக பழைய ஓய்வூதிய திட்டம் வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டுள்ளது.
முதலமைச்சர் சுகு தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில், இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி, இமாச்சல பிரதேச மாநிலத்தில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரும். இதற்காக நடப்பு நிதியாண்டில் அரசுக்கு ரூ.1,000 கோடி நிதிச்சுமை ஏற்படும் எனத் தெரிவித்துள்ளது. மேலும், மே 15, 2003 க்குப் பின் ஓய்வு பெற்று புதிய ஓய்வூதிய நடைமுறையில் உள்ளவர்களுக்கும் பழைய ஓய்வூதியத்தை தருவதற்கு அரசு வழிவகை செய்யும் என அறிவிப்பில் கூறியுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக சுக்விந்தர் சுகு பதவியேற்றார். தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதியை அளித்தது.
அக்கட்சியின் தேர்தல் வெற்றிக்கு இந்த வாக்குறுதி முக்கிய பங்கு வகித்ததாக கருதப்படுகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தும் 4ஆவது மாநிலம் இமாச்சலப் பிரதேசமாகும். ஏற்கனவே, சத்தீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டங்கள் அமலில் உள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Himachal CM, Himachal Pradesh