ஹோம் /நியூஸ் /இந்தியா /

இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு… ஒரே கட்டமாக நடைபெறுகிறது வாக்குப்பதிவு…

இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு… ஒரே கட்டமாக நடைபெறுகிறது வாக்குப்பதிவு…

டிசம்பர் 8-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

டிசம்பர் 8-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் தற்போது பாஜக தலைமையிலான அரசு பொறுப்பில் இருந்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தல் தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இதேபோன்று குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி, இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.

68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சல பிரதேச சட்டமன்றத்தின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

இதன்படி நவம்பர் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக இமாச்சல பிரதேசத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அக்டோபர் மாதம் 17 -ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் குறித்த அரசு ஆணை வெளியிடப்படுகிறது. இதை அடுத்து தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். அக்டோபர் 25ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்து கொள்ளலாம்.  அக்டோபர் 27-ஆம் தேதி விருப்பமுள்ளவர்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

காங். தலைவர் தேர்தல் - 'பிற எதிர்க்கட்சிகளை அரவணைத்து செல்ல கார்கே தகுதியானாவர்' - அசோக் கெலாட்

தேர்தலில் பதிவாகும்  வாக்குகள் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றைக்கே அறிவிக்கப்படுகிறது. இதேபோன்று 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டமன்றத்தின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி 18 -ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இதையொட்டி குஜராத் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு அவை வெளியிடப்படவில்லை.

ஹிஜாப் தடை வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு- பெரிய அமர்வுக்கு மாறும் விசாரணை

68 உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சல பிரதேச சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெறுவதற்கு 35 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் தற்போது பாஜக தலைமையிலான அரசு பொறுப்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Election, Himachal Pradesh