ஹோம் /நியூஸ் /இந்தியா /

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாஜகவில் இணைந்தார்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாஜகவில் இணைந்தார்

பாஜகவில் இணைந்த ஹர்ஷ் மஹாஜன்

பாஜகவில் இணைந்த ஹர்ஷ் மஹாஜன்

ஹிமாச்சல் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற இருக்கும் போது அந்த மாநிலத்தின் காங்கிரஸ் செயல் தலைவர் பாஜகவில் இணைந்திருப்பது முக்கியமான அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Himachal Pradesh, India

  இந்தியா முழுவதிலும் காங்கிரஸ் மட்டுமில்லாது பல கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் பாஜகவில் இணைந்து வருகிறார்கள். அந்த வகையில் ஹிமாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் செயல் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்ஷ் மஹாஜன் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் முன் பாஜகவில் இணைந்துள்ளார்.

  முக்கியமான அரசியல் தலைவர் ஒருவர் இன்று நண்பகல் 12 மணிக்கு பாஜகவில் சேரவுள்ளார் என அக்கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அவர் யாராக இருக்கும்? எந்த கட்சியை சேர்ந்தவர் என ஒரு பக்கம் கேள்வியும் இவராக தான் இருக்கும் என்று மற்றொரு பக்கம் ஊகங்களும் பரவத் தொடங்கின.

  இந்நிலையில், ஹிமாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் செயல் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்ஷ் மஹாஜன் இன்று பாஜகவில் இணைந்தார். பாஜகவில் சேர்ந்த பின் அவர் அளித்த பேட்டியில், “நான் காங்கிரஸ் கட்சியில் 45 வருடமாக இருந்தேன். இன்று அந்த கட்சி தலைமை இல்லாமல் எந்த பாதையில் செல்கிறது என்று தெரியாமலும் உள்ளது. மேலும் காங்கிரஸ் தொலைநோக்கு பார்வை இல்லாமலும், களத்தில் இறங்கி பணி செய்ய யாரும் இல்லாத நிலையில் உள்ளது” என்று தெரிவித்தார்.

  Also Read : PFI அமைப்பு உருவானது எப்படி?

  ஹிமாச்சல் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற இருக்கும் போது அந்த மாநிலத்தின் காங்கிரஸ் செயல் தலைவர் பாஜகவில் இணைந்திருப்பது முக்கியமான அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: BJP, Congress, Himachal Pradesh