இமாச்சலப் பிரதேசத்தின் 37 ஆண்டு அரசியல் டிரெண்ட் மீண்டும் நிரூபணமாக உள்ளது. ஆம், 1985 ஆம் ஆண்டிற்குப் பிறகு இமாச்சலப்பிரதேசத்தில் எந்தவொரு ஆளும் கட்சியும் அடுத்து வரும் தேர்தலில் வென்றதில்லை. அதே நிலைதான் இப்போதும் ஏற்படும் போல் தெரிகிறது. குஜராத்தை போல்வே இமாச்சலிலும் வெற்றி பெற்று விடலாம் என காத்திருந்தது பாஜக. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் அதையேதான் உறுதி செய்தன.
ஆனால் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நேரத்தில் நிலைமை வேறு விதமாக போய்க் கொண்டிருக்கிறது. 68 இடங்களை கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்திற்கு கடந்த நம்பர் 12 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
தொடக்கம் முதலே முன்னனி நிலவரத்தில் இழுபறி நீடித்து வந்தாலும், காங்கிரசின் கைதான் ஓங்கியிருக்கிறது. அதனால் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலைமை உருவாகும் போல் தெரிகிறது. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் இப்போது ஆளும் கட்சியாகும் வாய்ப்பு அமைந்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 21 இடங்களில் வென்றது. பாஜக 44 இடங்களில் வென்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆனால் இந்த தேர்தலில் பாஜகவிற்கு 20 முதல் 25 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவின் சரிவிற்கு முக்கிய காரணம் முதலமைச்சராக இருந்த ஜெய்ராம் தாக்கூராக இருக்க கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
அவர் மீது இருந்த அதிருப்தி காரணமாகத்தான் இந்த தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என அறிவிக்காமல் களம் கண்டது பாஜக. அதுவே ஒரு பின்னடைவு தான். அனைத்து மாநிலங்களிலும் முதலமைச்சர் வேட்பளரை முன்னிறுத்தி பரப்புரை மேற்கொள்ளும் பாஜவின் இந்த தடுமாற்றம் வாக்காளர்களிடையே உளவியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ஜெய்ராம் தாக்கூர் சொர்ராஜ் தொகுதியில் கடந்த 1998ஆம் ஆண்டு முதல் தோற்றதேயில்லை. ஆனால் இந்த தேர்தலில் அவருக்கு கூட இழுபறி தான்.
Also see... குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியை தக்கவைக்கும் பாஜக.. பாதாளம் சென்ற காங்கிரஸ்!
தற்போது வரை 11 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்க, அடுத்த முதலமைச்சர் யார் என்ற விவாதம் தொடங்கிவிட்டதாம் இமாச்சலப் பிரதேச காங்கிரசுக்குள்.
செய்தியாளர்: ரொசாரியோ ராய். எல்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Assembly Election 2022, BJP, Congress, Himachal