Home /News /national /

மகளின் ஆன்லைன் கல்விக்காக பசுமாட்டை விற்று செல்போன் வாங்கிய தந்தை

மகளின் ஆன்லைன் கல்விக்காக பசுமாட்டை விற்று செல்போன் வாங்கிய தந்தை

குல்தீப் குமார் | சோனு சூட்

குல்தீப் குமார் | சோனு சூட்

தனக்கு வருமானம் கொடுத்த பசு மாட்டை விற்று தனது மகளின் ஆன்லைன் வகுப்புக்காக ஸ்மார்ட்போன் வாங்கியுள்ளார் தந்தை ஒருவர்.

  • News18
  • Last Updated :
    கொரோனா ஊரடங்கால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், 90 சதவிகித தனியார் பள்ளிகள் ஆன்லைன் கல்வி முறைக்கு மாறியுள்ளன. ஆனால், ஆன்லைன் கல்விக்கு தேவையான ஸ்மார்ட்போன், இணைய வசதி உள்ளிட்டவை எல்லா மாணவர்களுக்கும் இருக்குமா என்ற கேள்வி எழுந்தது?

    இந்த நிலையில், தனக்கு வருமானம் கொடுத்த பசு மாட்டை விற்று தனது மகளின் ஆன்லைன் வகுப்புக்காக ஸ்மார்ட்போன் வாங்கியுள்ளார் தந்தை ஒருவர்.

    இமாச்சல பிரதேசத்தின் கங்கரா மாவட்டத்தின் ஜவாலமுகி தெஹ்ஸில் உள்ள கும்மர் கிராமத்தில் வாழ்ந்து வருபவர் குல்தீப் குமார். அவரது மகள் அனு மற்றும் மகன் வான்ஷ் முறையே நான்காம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பில் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், தனது மகளின் ஆன்லைன் வகுப்புக்காக ஸ்மார்ட்போன் வாங்க வேண்டிய தேவை குல்தீப் குமாருக்கு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கால் வருமானமே இல்லாத நிலையில், வீட்டில் இருந்த பசு மாட்டை ரூ .6,000-க்கு விற்று குழந்தைகளுக்கு படிப்பைத் கொடுக்க ஸ்மார்ட்போன் வாங்கியுள்ளார்.




    படிக்க: என்றென்றும் தஞ்சை மண்ணுக்கு தலைவணங்குகிறேன்: தஞ்சாவூர் மக்கள் புகாருக்கு வனிதா விளக்கம்

    படிக்க: மாதம் சுமார் ரூ.15 ஆயிரத்திற்கு குறையாமல் வருமானம் கிடைக்க அரசின் திட்டம்

    படிக்க: இந்து மதத்தை இழிவுபடுத்தினால் நாக்கை துண்டிக்க பயப்படவேண்டாம்... ஆதீனம் சிவலலிங்கேஸ்வரர் சர்ச்சைப் பேச்சு








    பசு மாட்டின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நகர்த்தி வந்த குல்தீப், மகளின் ஆன்லைன் வகுப்புக்காக அதனை விற்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில்,  பலரும் உதவ முன்வந்துள்ளனர்.

    நடிகர் சோனு சூத் இந்த செய்தியை பகிர்ந்து மாடுகளை திரும்பப் பெற உதவ முன்வந்துள்ளார், மேலும் அவருடைய விவரங்களை பற்றியும் கேட்டுள்ளார்.



    ஏற்கனவே, புலம் பெயர் தொழிலாளர்களை தங்களது சொந்த ஊருக்கு அனுப்புவதற்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்து அனைவரின் பாராட்டையும், வாழ்த்துக்களையும் சோனு சூட் பெற்றது குறிப்பிடத்தக்கது.
    Published by:Sankar A
    First published:

    Tags: Online class

    அடுத்த செய்தி