ஹோம் /நியூஸ் /இந்தியா /

திடீர் நிலச்சரிவு.. மண்ணில் புதைந்த அரசுப்பேருந்து.. பதற வைக்கும் காட்சிகள் - மீட்புப்பணிகள் தீவிரம்

திடீர் நிலச்சரிவு.. மண்ணில் புதைந்த அரசுப்பேருந்து.. பதற வைக்கும் காட்சிகள் - மீட்புப்பணிகள் தீவிரம்

இமாச்சல்பிரதேசம் விபத்து

இமாச்சல்பிரதேசம் விபத்து

இமாச்சல்பிரதேசத்தில் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் கடந்த சில வாரங்களாக நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இமாச்சல் பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் மலைச்சாலையில் சென்றுக்கொண்டிருந்த பேருந்து சிக்கியது மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

  இமாச்சல்பிரதேசம் மாநிலம் கினாவூர் மாவட்டம் நிகுல்சேரி என்ற இடத்தில் பகல் 12.45 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மலையில் இருந்து சரிந்த பாறைகள் சாலையில் சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்து மற்றும் மேலும் சில வாகனங்களை மண்ணில் புதைத்தது.

  நிலச்சரிவு

  சிம்லா நோக்கி சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்தில் சுமார் 40 பேர் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற வாகனங்களில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இதனையடுத்து உடனடியாக ராணுவம் மற்றும் மீட்புப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் நிலச்சரிவில் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

  பேருந்து ஓட்டுநர் உட்பட 10 பேர் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிலர் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என உள்ளூர் போலீஸார் கூறுகின்றனர்.மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விபத்தில் சிக்கியவர்களின் விவரங்கள் முழுமையாக தெரியவில்லை. காரில் பயணம் செய்தவர்கள் குறித்து தெரியவில்லை. மீட்புப்பணிகள் நிறைவடைந்ததும் விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் தெரியவரும்.

  நிலச்சரிவு

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பிரதமர் நரேந்திர மோடி இமாச்சல்பிரதேச முதல்வரை போனில் தொடர்புக்கொண்டு பேசியுள்ளார். மீட்புப்பணிகளுக்கு தேவையாக உதவிகள் வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளார். மழையின் காரணமாக இமாச்சல்பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதம் ஏற்பட்டநிலச்சரிவில் இமாச்சலுக்கு சுற்றுலா வந்த 9 பேர் பாறைகள் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Floods in Himachal, Himachal Pradesh, India