மலைக்கோயில் திருவிழாவில் விபரீதம்.. சாமியாடிய பூசாரி மலையில் இருந்து விழுந்து பலி

மலைக்கோயில் விபரீதம்

சாமியாடிக்கொண்டே அருள்வாக்கு சொல்லிக்கொண்டு இருந்த பூசாரி மலையில் இருந்து கீழே விழுந்து பலியானார்

 • Share this:
  ஆந்திராவில் மலைக்கோயிலில் பூஜை செய்த பூசாரி மலைமுகடுகளில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் கம்பமல்லையா சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் பாரம்பரிய முறைப்படி வருடா வருடம் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்தாண்டு ஊரடங்கு காரணமாக திருவிழா விமர்சையாக நடைபெறாத நிலையில் இந்த வருடம் திருவிழா நடத்தபட்டது. ஏராளமான மக்கள் கம்பமல்லையா சுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்ய குவிந்திருந்தனர்.

  Also Read: சுதாரித்த ஓட்டுநர்.. நூலிழையில் உயிர்தப்பிய பயணிகள் - வைரல் வீடியோ

  இந்த கோயிலில் பாப்பையா  என்பவர் பூசாரியாக இருக்கிறார்.  மலை உச்சியில் அமைந்த இந்த குகை கோயிலில் பூசாரி சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தி திருவிழாவை நடத்தி வைப்பார். பூசாரி வழக்கம்போல் மலைக்கோயிலில் பூஜைகளை நடத்திக்கொண்டிருந்தார். ஏராளமான மக்கள் அங்கு குவிந்திருந்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பூஜைகளின் போது பாப்பையாவுக்கு அருள் வந்ததாக கூறப்படுகிறது. சாமியாடிக்கொண்டே அருள்வாக்கு சொல்லிக்கொண்டு இருந்தவர். மலை முகடுகளில் இருந்து காலை எடுத்துவைக்கும் போது பாறையில் இருந்த எண்ணெய் பிசுபிசுப்பு காரணமாக கால் வழுக்கி விட்டுள்ளது. இதில் நிலைத்தடுமாறிய பூசாரி.அங்கிருந்து அப்படியே கீழே விழுந்தார்.

  Also Read: பத்தாயிரத்துக்கு சில்லறை கொடுங்க.. ரூ.500 வேண்டாம் ரூ.100 கொடுங்க - கரூரில் நூதன மோசடி மக்களே உஷார்

  மலையிலிருந்து விழுந்த பூசாரி மலைப்பாறைகளில் மோதி கீழே விழுந்தார். பாறைகளில் மோதியதில் அவரது உடலில் கடுமையான காயங்கள் ஏற்பட்டது. அங்கிருந்த மக்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால் மலையில் இருந்து விழுந்த்தால் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்தக் காட்சிகளை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: