ரிலையன்ஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழில் அதிபர் அஜய் பிரமலின் மகன் ஆனந்த் பிரமலுக்கும், டிசம்பர் 12-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரில் திருமணம் நடைபெறவுள்ளது.
திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முக்கிய பிரமுகர்கள் உதய்பூரில் குவிந்து வருகின்றனர். முகேஷ் அம்பானியின் அழைப்பின்பேரில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் இன்று உதய்பூரை அடைந்தார்.
மேலும் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் லீ ஜே யாங், லண்டன் தொழிலதிபர் லட்சுமி மிட்டல், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, நடிகர் அனில் கபூர், இந்தி திரைப்பட இயக்குனர் டேவிட் தவன், கிரிக்கெட் வீரர் தோனி, அவரது மனைவி சாக்ஷி உள்ளிட்ட பிரபலங்களும் உதய்பூர் வந்தடைந்துள்ளனர்.
Also watch
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Isha Ambani