Home /News /national /

ஹிஜாப் விவகாரம்: அனைத்து மதத்தினரும் பள்ளி சீருடை விதிகளை பின்பற்ற வேண்டும்: அமித் ஷா

ஹிஜாப் விவகாரம்: அனைத்து மதத்தினரும் பள்ளி சீருடை விதிகளை பின்பற்ற வேண்டும்: அமித் ஷா

அமித் ஷா

அமித் ஷா

நாடு அரசியலமைப்பின்படி செயல்பட வேண்டுமா அல்லது விருப்பத்தின்படி செயல்பட வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும். நீதிமன்றம் ஒரு முடிவை எடுத்தவுடன், நான் அதை ஏற்க வேண்டும், எல்லோரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்என ஹிஜாப் விவகாரம் தொடர்பாக அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அனைத்து மதத்தினரும் பள்ளி சீருடை விதிகளை பின்பற்ற வேண்டும் என ஹிஜாப் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தார்.

    கர்நாடக அரசு ஜூனியர் கல்லூரிகளில் திடீரென இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இத்தடை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதனை எதிர்த்து 5 மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ணா எஸ் தீட்சித் மற்றும் ஜே.எம்.காஜி அமர்வில் நடைபெற்று வருகிறது.

    கர்நாடகாவில் விதிக்கப்பட்டுள்ள ஹிஜாப் தடை  நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இதற்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவருமான அமித்ஷா  நெட்வொர்க் 18 குழுமத்துக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.

    நியூஸ் 18 தொலைக்காட்சி ஆசிரியர் ராகுல் ஜோஷி உடனான நேர்காணலில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அமித் ஷா கலந்துரையாடினார். அப்போது ஹிஜாப் விவகாரம் தொடர்பான பேசிய அமித் ஷா, அனைத்து மதத்தினரும் பள்ளி சீருடை விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கை. தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது, நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.

    இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்திருத்தத்தை அமல்படுத்த நடவடிக்கை... பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை: அமித்ஷா


    அது என்ன தீர்ப்பை வழங்குகிறதோ அதனை அனைத்து மதத்தினரும் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார். ', நாடு அரசியலமைப்பின்படி செயல்பட வேண்டுமா அல்லது விருப்பத்தின்படி செயல்பட வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும். எனது தனிப்பட்ட நம்பிக்கை நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை மட்டுமே உள்ளது. நீதிமன்றம் ஒரு முடிவை எடுத்தவுடன், நான் அதை ஏற்க வேண்டும், எல்லோரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், ஒவ்வொரு மாணவரும் பள்ளி விதித்துள்ள ஆடைக் கட்டுப்பாடு மற்றும் சீருடையின்படி செயல்பட வேண்டும் என்று நான் இன்னும் தனிப்பட்ட முறையில் விரும்புகிறேன்’ என அமித் ஷா தெரிவித்தார்.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Amit Shah To News 18, BJP, Election 2022, Hijab

    அடுத்த செய்தி