Home /News /national /

பர்தா அணிந்து வந்த மாணவியை முற்றுகையிட்டு ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்ட மாணவர்கள் - வைரலாகும் வீடியோ

பர்தா அணிந்து வந்த மாணவியை முற்றுகையிட்டு ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்ட மாணவர்கள் - வைரலாகும் வீடியோ

ஹிஜாப் விவகாரம்- மாணவி முற்றுகை

ஹிஜாப் விவகாரம்- மாணவி முற்றுகை

தனது வாகனத்தை நிறுத்திவிட்டு மாணவி நடந்து வந்தபோது, காவி துண்டு அணிந்திருந்த சில மாணவர்கள் மாணவியை முற்றுகையிட்டு ஜெய்ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பினர். மாணவியும் பதிலுக்கு அல்லாஹு அக்பர் என்று ஆக்ரோஷமாக கோஷம் எழுப்பியபடி வகுப்பறையை நோக்கி முன்னேறினார்.

மேலும் படிக்கவும் ...
    கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் பெரிதாகிவரும் சூழலில் மாண்டியாவில் கல்லூரிக்கு பர்தா அணிந்துவந்த பெண்ணை முற்றுகையிட்ட சில மாணவர்கள் ஜெய்ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பினர். பதிலுக்கு மாணவியும், அல்லாஹு அக்பர் என அவர்களை நோக்கி எதிர்கோஷம் எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கர்நாடக மாநிலம் உடுப்பியில் அமைந்துள்ள ஒரு பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் புதிய பிரச்னை உருவானது. அங்குள்ள அரசு PUC கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவியர் தலையில் முக்காடாக அணியும் ஹிஜாபை வழக்கம்போல் அணிந்து வந்தபோது வகுப்பில் அமரக் கூடாது என நிர்வாகம் கூறியது. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ, மாணவியர்களில் ஒருசிலர் காவி துண்டு அணிந்து கல்வி நிலையங்களுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

    மேலும் படிக்க: லவ் ஜிகாத்துக்கு 10 ஆண்டு சிறை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்... உ.பியில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

    ஹிஜாப் - காவித் துண்டு விவகாரம் தற்போது கர்நாடகாவில் மிகப்பெரும் பிரச்சனையாகா உருவெடுத்துள்ளது. இதனால் ஒருசில இடங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாண்டியாவில் உள்ள PES கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மாணவி ஒருவர் பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்துள்ளார்.

    தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அவர் நடந்து வந்தபோது, காவி துண்டு அணிந்திருந்த சில மாணவர்கள் மாணவியை முற்றுகையிட்டு ஜெய்ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பினர். மாணவியும் பதிலுக்கு அல்லாஹு அக்பர் என்று ஆக்ரோஷமாக கோஷம் எழுப்பியபடி வகுப்பறையை நோக்கி முன்னேறினார். எனினும், மாணவர்கள் பின்தொடர்ந்து வந்து கோஷம் எழுப்பினர். உடனடியாக கல்லூரி ஊழியர்கள் தலையிட்டு மாணவியை பத்திரமாக அழைத்து சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Dress code, Karnataka, School students

    அடுத்த செய்தி