முத்தலாக் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் என்ன?

முத்தலாக் சட்டத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு இல்லை என்று ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.

Web Desk | news18
Updated: July 26, 2019, 8:32 AM IST
முத்தலாக் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் என்ன?
ரவிசங்கர் பிரசாத்,
Web Desk | news18
Updated: July 26, 2019, 8:32 AM IST
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடை மசோதாவின்படி, முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். ஆனால், இது பெண்களுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இஸ்லாமிய பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் முத்தலாக் தடை மசோதாவை மக்களவையில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதாவின்படி, உடனடியாக மூன்று முறை தலாக் கூறி, விவாகரத்து செய்யும் முறை ரத்து செய்யப்படுகிறது. இதை மீறி தலாக் கூறி விவாகரத்து செய்யும் கணவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.


இந்த சட்டத்தின் படி தலாக் கூறும் கணவன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்படும், ஆனால், ஜாமீன் கோரும் மனு மீதான விசாரணை தொடங்குவதற்கு முன்பே, குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் மாஜிஸ்திரேட்டை நாட முடியும். மனைவியின் கருத்துக்களைக் கேட்டபிறகு, ஜாமீன் வழங்குவது குறித்து மாஜிஸ்திரேட் முடிவு செய்யலாம்.

ஆனால், முத்தலாக் கூறி விவாகரத்து செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்ட நபர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும்போது தான் முத்தலாக் கூறவில்லை என்று தெரிவித்தால், அதனை எவ்வாறு நிரூபிக்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இதனை குற்றச் செயலாக குறிப்பிடுவதன் மூலம், மனைவியுடன் சமாதானப் பேச்சு நடத்துவதற்கான வாய்ப்புகளை மூடிவிடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. வங்கதேசத்தை தவிர வேறு எந்த நாட்டிலும் முத்தலாக் கிரிமினல் குற்றமாக குறிப்பிடவில்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Loading...

முத்தலாக் முறைக்கு கடந்த 2017-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், பாலின சமத்துவத்துக்கு, நீதி கிடைக்கச் செய்யும் இந்த சட்டத் திருத்தம் அவசியமானது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

பலதார மணம், இருதார மணம் போன்ற பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்து நடைமுறைகளும் நீக்கப்படுவதாக சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் மிகவும் நெருங்கிய உறவினர்களே புகார் தெரிவிக்க முடியும், சமாதானப் பேச்சு ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள், மாஜிஸ்திரேட்டால் மட்டுமே ஜாமீன் வழங்க முடியும் என்ற மூன்று பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு இல்லை என்றும் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க...அதிமுக ஆதரவோடு முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றம்





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...