ஹோம் /நியூஸ் /இந்தியா /

உ.பி.-ல் கொலை, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவிட்டன: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

உ.பி.-ல் கொலை, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவிட்டன: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ்

  • 1 minute read
  • Last Updated :

கடந்த 30 மாதங்களில் உ.பி.-ல் குற்றங்கள் அதிகரித்துவிட்டதாக, அம்மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர், மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது, உ.பி. தான் மனித உரிமை ஆணையத்திடமிருந்து மிக அதிகமான நோட்டிஸ்களைப் பெற்றுள்ளதாகவும், குற்றங்களின் எண்ணிக்கை இங்கு குறைத்துக் காட்டப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் பேசிய அவர், “காவல்துறை அதிகாரிகளில் பலர் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கடந்த இரண்டரை வருடத்தில், மிக அதிகமான காவல்நிலைய இறப்புகள் நிகழ்துள்ளன.

குற்ற நிகழ்வுகள் குறித்த புள்ளிவிரங்களை உ.பி. அரசு மறைக்கிறது. மாநிலத்தில் நடக்கும் கொலை, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. உத்தரப்பிரதேச மக்கள் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. ஷாஜஹான்பூர் மற்றும் ராம்பூரில் நிகழ்ந்த சம்பவங்கள், மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு எந்த நிலைமையில் இருக்கிறது என்பதற்கு ஆதாரம். அரசு நிர்வாகம் என்னதான் செய்துகொண்டிருக்கிறது’’ என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

First published:

Tags: Akilesh yadav, Uttar pradesh, Yogi adityanath