ஜம்மு-காஷ்மீரில் உயர்நிலைப் பள்ளிகள் இன்று திறக்கப்படும் என்று கல்வித் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீர் மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதுடன், போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்களின் இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது.
ஆரம்பப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் ஏற்கனவே திறக்கப்பட்ட நிலையில், உயர்நிலைப் பள்ளிகள் இன்று திறக்கப்படும் என்று மாநில கல்வித் துறை இயக்குநர் யூனிஸ் மாலிக் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, குப்வாரா மற்றும் பாரமுல்லா பகுதிகளில் மக்களை ராணுவ வடக்கு பிராந்திய தளபதி ரண்பீர் சிங் சந்தித்துப் பேசினார். அப்போது மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர் உறுதியளித்தார். பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் என்றும் வதந்திகளை பரப்புவோரை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
Also see...வேலையிழப்பு விவகாரம்! அமைச்சர் எம்.சி.சம்பத் விளக்கம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jammu and Kashmir, School