அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் செல்போனில் பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதில் விதி மீறல் செய்யப்பட்டுள்ளது.
இது எப்படி நடந்தது என சிபிஐ மற்றும் கிறிஸ்டியன் மைக்கேல் என இருதரப்பும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு அவரது நாட்டில் உள்ள குடும்பம், நண்பர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் வாரத்திற்கு 15 நிமிடங்கள் பேச விசாரணை நீதிமன்றம் அனுமதியளித்து இருந்தது. ஆனால் கிறிஸ்டியன் மைக்கேல் அவரது குடும்பம், வழக்கறிஞர்கள் மட்டுமில்லாமல் பிற நாட்டவர்களையும் தொடர்புகொள்ள அனுமதி கேட்டபோது நீதிமன்றம் அதை விசாரணை நீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில் விதியை மீறி அமலாக்கத் துறை இந்த வழக்கை விசாரிக்கும் போது சோனியா காந்தி பற்றி கேள்வி கேட்கும் போது எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்று இவர் அவரது வழக்கறிஞர் மட்டுமில்லாமல் வேறு பலரை தொடர்புக்கொண்டு பேசியதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது.
இதைக்கேட்ட நீதிமன்றம் இது எவ்வாறு நடந்தது என்று ஏப்ரல் 22-ம் தேதி சிபிஐ விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கிறிஸ்டியன் மைக்கேலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
2010-ம் ஆண்டு நடைபெற்ற அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழலால் இந்தியாவுக்கு 2,666 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் விவிஐபிகள் பயணம் செய்வதற்கு பயன்படுத்துவது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விமானத்தை வாங்கும் போது இடைத்தரகராக செயல்பட்டதாகவும், உழலில் தொடர்புள்ளதாகவும் கிறிஸ்டியன் மைக்கேல் 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.