Home /News /national /

இலங்கை சிறையில் எஞ்சியுள்ள மீனவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை: வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தகவல்

இலங்கை சிறையில் எஞ்சியுள்ள மீனவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை: வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தகவல்

மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக இலங்கை அரசுடன் கொழும்பில் உள்ள இந்திய தூதரக உயரதிகாரிகள் பேசி வருவதாக மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்தது.

மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக இலங்கை அரசுடன் கொழும்பில் உள்ள இந்திய தூதரக உயரதிகாரிகள் பேசி வருவதாக மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்தது.

மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக இலங்கை அரசுடன் கொழும்பில் உள்ள இந்திய தூதரக உயரதிகாரிகள் பேசி வருவதாக மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    இலங்கை சிறையில் எஞ்சியுள்ள மீனவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

    ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 55 மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் டிசம்பர் 18ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களின் 8 படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 20ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 விசைப்படகுகளும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டது.

    Also read: பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கும்? பயண திட்டங்கள், தவறுகளுக்கு யார் பொறுப்பு? - Explainer

    இதைத்தொடர்ந்து, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 68 பேரை விரைவில் விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் மத்திய அரசுக்கு அழுத்தம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக இலங்கை அரசுடன் கொழும்பில் உள்ள இந்திய தூதரக உயரதிகாரிகள் பேசி வருவதாக மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்தது.

    இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 12 மீனவர்கள் நேற்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, 12 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    இதனிடையே, இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சியிடம், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து நியூஸ் 18 செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதிலளித்து பேசிய செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, கடந்த டிசம்பர் 18 முதல் 20ம் தேதி வரையில் தமிழகத்தைச் சேர்ந்த 68 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். அவர்களது 10 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து இந்திய அரசு கவலை கொண்டுள்ளது.

    யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக உயர் அதிகாரிகள், காவலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களைச் சந்தித்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான உடைகள், முகக் கவசங்கள், குளியலறைப் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளனர். மேலும், அவர்கள் உறவினர்களுடன் தொலைப்பேசி மூலம் பேசுவதற்கான ஏற்பாடுகளையும் அவர் செய்து கொடுத்துள்ளனர்.

    தொடர்ந்து, மீனவர்களை விரைவில் விடுவிக்கக்கோரி இலங்கையில் உள்ள இந்திய உயர்மட்ட குழுவினர் கொடுத்த அழுத்தத்தின் பலனாக 12 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாடு திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உயர்மட்ட குழு மேற்கொண்டுள்ளது.

    அதேபோல், மீதமுள்ள மீனவர்களை விரைவில் விடுவிக்கவும், அவர்களின் படகுகளை விடுவிக்கவும், இந்திய உயர்மட்ட குழுவினர் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, மீன்பிடித்துறையில் கூட்டு ஒத்துழைப்புக் குழுவை முன்கூட்டியே நடத்துவது குறித்து இரு தரப்பும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    Also read:  இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பானது; ஓமைக்ரான் எண்ணிக்கை புதிய உச்சம்...
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Fisherman, Srilanka

    அடுத்த செய்தி