Home /News /national /

ஆதார் எண்ணை கணக்குகளிலிருந்து நீக்குவது எப்படி?

ஆதார் எண்ணை கணக்குகளிலிருந்து நீக்குவது எப்படி?

ஆதார்

ஆதார்

  • News18
  • Last Updated :
    பயோமெட்ரிக் தகவல்களை பெற்று, தேசிய அடையாளத்தைத் தரும் ஆதார் கார்டு திட்டம், அரசியல் சட்டபடி செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ஆதார் பயன்பாட்டுக்கு சில கட்டுப்பாட்டுகளை விதித்துள்ளது. எதற்கெல்லாம் ஆதார் தேவையில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

    • தனியார் நிறுவனங்கள், ஆதார் கார்டு குறித்து தகவல்களை கேட்க முடியாது.

    • புதிய சிம் கார்டு வாங்க ஆதார் அவசியமில்லை.

    • உங்கள் வங்கி கணக்கையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டிய கட்டாயமில்லை.

    • பள்ளிகளும், படிக்கும் குழந்தைகளின் ஆதார் கார்டு குறித்தான தகவல்களை கேட்க முடியாது. பள்ளியில் அட்மிஷனுக்கும் பள்ளியில் அரசு கொடுக்கும் சலுகைகளுக்கும் ஆதார் அவசியமில்லை.


    • இணையத்தில் இ-வாலட் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பலவும் ஆதார் எண்ணை இணைக்க சொல்லி கட்டாயப்படுத்தியது. அதன்படி பலரும் தங்களின் ஆதார் எண்ணை இணைத்திருந்தனர். இந்நிலையில் இணைக்கப்பட்ட ஆதாரை டி-லிங்க் செய்வது எப்படி என்பதை விரிவாக தருகிறது நியூஸ் 18.

      பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் பே.டி.எம்மில் இணைத்துள்ள ஆதாரை எவ்வாறு நீக்கலாம் என்பதை பார்ப்போம்.

      • பேடிஎம் கஸ்டமர் கேர் எண்ணில் தொடர்பு கொண்டு 01204456456 கொள்ளவும்.

      • இணைத்த ஆதாரை நீக்குவதற்கான லிங்கை மெயில் அனுப்பச்சொல்லி கேட்கலாம்.

      • பேடிஎம்-லிருந்து வரும் லிங்கை பண்படுத்தி இணைக்கப்பட்டுள்ள ஆதார் எண்ணை நீக்கலாம்.

      • ஆதாரை நீக்கியதும் அடுத்த 72 மணி நேரத்திற்குள் அதற்கான உறுதிப்படுத்தப்பட்ட மெயில் உங்களுக்கு வந்து விடும்.




      • வங்கி கணக்கிலிருந்து உங்களின் ஆதாரை நீக்க உங்களின் வங்கிக் கிளைக்கு நேரடியாக செல்ல வேண்டும்.

        • உங்களின் கணக்கு உள்ள வங்கிக்கு செல்லுங்கள்

        • இணைக்கப்பட்ட ஆதார் எண்ணை நீக்குவது தொடர்பான படிவத்தை பூர்த்தி செய்து கொடுங்கள்.

        • அடுத்த 48 மணிநேரத்திற்குள் இணைக்கப்பட்ட ஆதார் எண் நீக்கப்பட்டு விடும்.

    Published by:Saroja
    First published:

    Tags: Aadhaar Verdict, Delink Aadhaar from digital wallet bank, SC judgement for Aadhaar

    அடுத்த செய்தி