இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் மட்டும் அல்ல, சிறிய குழந்தைகளுக்கு முதல் கொண்டு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை அனைத்து வகையான தேவைகளுக்கும் ஒரு அத்தியாவசிய ஆவணமாகும். வங்கி பரிவர்தனைகள் அல்லது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் எதுவாக இருந்தாலும், நீங்கள் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும். புதிய தொலைபேசி இணைப்பைப் பெறுவது முதல் உங்கள் வருமான வரியைத் தாக்கல் செய்வது வரை அனைத்தும் இப்போது ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளன.
நீங்கள் எங்கு என்றாலும் உங்கள் விவரங்களை சரிபார்க்க ஆதார் கேட்கப்படும். எனவே உங்கள் ஆதார் அட்டையில் அனைத்து விவரங்களையும் சரியாக குறிப்பிடுவது முக்கியம். உங்கள் ஆதார் அட்டையில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை ஆதார் சேவை மையத்திற்கு சென்று திருத்தி கொள்ள முடியும். உங்கள் ஆதார் அட்டையில் உள்ள பெயர், பாலினம் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை ஆன்லைனில் மாற்றி கொள்ளலாம்.
ஆனால் ஆன்லைனில் எந்த ஒரு திருத்தங்களை மேற்கொள்ளவும் உங்களது மொபைல் எண் சரியானதாகவும், தற்போது பயன்பாட்டில் இருப்பதும் அவசியமானதாகும். ஒரு சிலர் ஆதார் விண்ணப்பித்த போதே மொபைல் எண் கொடுக்காமல் இருப்பார்கள், இவர்கள் நேரடியாக ஆதார் சேவை மையத்திற்கு சென்று மொபைல் எண்ணை இணைக்க விண்ணப்பித்து கொள்ளலாம். நீங்கள் உங்கள் ஆதாரில் ஏற்கனவே கொடுத்துள்ள மொபைல் எண்ணை மாற்ற விரும்பினால், ஆன்லைனிலேயே மாற்றி கொள்ளலாம்.
ஆதாரில் மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி என்பது இங்கே...
இப்போது ஆன்லைனில் முன்பதிவு செய்து அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு சென்று, இந்த செயல்முறையை முடிக்க நீங்கள் ரூ.25 கட்டணம் செலுத்த வேண்டும்.
பெயர், முகவரி, பிறந்த தேதி/வயது, பாலினம், மொபைல் எண், ஈமெயில் ஐடி ஆகியவற்றையும் நீங்கள் ஆன்லைனில் மாற்றி கொள்ளலாம். பயோமெட்ரிக் கருவிழி, கைரேகைகள் ஆகியவை கட்டாயம் தேவைப்பட்டால் நீங்கள் ஆதார் சேவை மையத்திற்கு செல்ல வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadhaar card, Online