Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /இந்தியா /

இனி ரயிலில் நிம்மதியா தூங்கலாம்... ‘வேக் அப் கால்’ சேவையை ஆக்டிவேட் செய்வது எப்படி தெரியுமா.?

இனி ரயிலில் நிம்மதியா தூங்கலாம்... ‘வேக் அப் கால்’ சேவையை ஆக்டிவேட் செய்வது எப்படி தெரியுமா.?

railway station

railway station

IRCTC | இரவு நேர ரயில் பயணத்தின் போது தூங்க முடியாமல் கவலைப்படும் பயணிகளுக்காக அசத்தலான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது இந்திய ரயில்வே.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இரவு நேர ரயில் பயணம் என்பது பலருக்கும் தூக்கம் தொலைத்த இரவாகவே இருக்கும். முன்னதாகவே திட்டமிட்டு டிக்கெட் புக் செய்து, ரயில் வருவது அரைமணி நேரம் முன்னாடியே ஸ்டேஷனுக்கு போய் காத்திருந்து, நமக்காக புக் பண்ணி வச்சியிருக்கும் பர்த்தில் போய் படுத்தால் நிம்மதியாக தூக்கம் வரணுமா இல்லையா?, ஆனால் வராது.. ஏனென்றால் எங்கே ஸ்டேஷனை விட்டுவிடுவோமோ கவலையிலேயே தூங்க முடியாது. அதுவும் தனியாக பயணிப்பவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம், அவர்களுக்கு அந்த ராத்திரி சிவராத்திரி தான்.

இப்படி இரவு நேர ரயில் பயணத்தின் போது தூங்க முடியாமல் கவலைப்படும் பயணிகளுக்காக இந்திய ரயில்வே அசத்தலான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதாவது இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்துவிட்டதா? என எழுந்து, எழுந்து பார்க்காமல் நிம்மதியான தூக்கத்துடன் பயணத்தை தொடர்வதற்காக wake up call என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சேவை மூலம் ரயில் நிலையங்கள் வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு ரயில்வே நிர்வாகம் உங்களை கால் செய்து எழுப்பிவிடும்.

இந்த வசதியை பெற நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு சில எளிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது தான்.

- உங்கள் மொபைல் ஃபோனிலிருந்து IRCTC உதவி எண்ணான 139ஐ அழைக்கவும்.

- அழைப்பு இணைக்கப்பட்டதும், உங்களுக்கு தெரிந்த மொழியை தேர்வு செய்ய வேண்டும்.

- அதன் பிறகு எந்த தொலைபேசி எண்ணுக்கு வேக் அப் கால் அலெர்ட் கொடுக்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்

- அதனைத் தொடர்ந்து உங்களுடைய 10 இலக்க PNR எண்ணை பதிவிட்டு, 1-ஐ அழுத்தி உறுதிப்படுத்த வேண்டும்.

Also Read : IRCTC மூலம் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வதற்கான வரம்பு அதிகரிப்பு: இந்திய ரயில்வே அறிவிப்பு

அவ்வளவுதான், உங்களுக்காக முன்பதிவு செய்த ஸ்லீப்பர் அல்லது ஏசி பெட்டியில் உள்ள இருக்கையில் படுத்து உறங்கலாம். சரியாக நீங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வருவதற்கு 20 நிமிடங்கள் முன்னதாக வேக் அப் கால் வந்து உங்களை எழுப்பிவிடும். இந்த வசதியை இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் சிறந்த அம்சம் என்னவென்றால், இந்த வசதிக்காக பயணிகள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. பயணிகளிடம் இருந்து ரயில்வே 3 ரூபாய் மட்டுமே வசூலிக்கிறது. இனி இரவு நேர ரயிலில் மன அழுத்தம் இன்றி நிம்மதியாக தூங்கலாம்.

Also Read : ரயில்வே துறையிடம் ரூ.35 பணத்தை திரும்ப பெற 5 ஆண்டுகள் வழக்கு நடத்தி வெற்றி பெற்ற நபர்

139 என்பது IRCTC- யின் சேவை எண்ணாகும், ரயில் வருகை அல்லது புறப்பாடு அட்டவணை, ரயிலின் தற்போதைய நிலை மற்றும் கட்டண விசாரணை ஆகியவற்றைக் காணலாம். மேலும் பயணிகள் குறிப்பிட்ட ரயில்களில் 139 மூலம் உணவை முன்பதிவும் செய்யலாம்.  இதன் மூலம் தக்கல் டிக்கெட் நிலவரம், டிக்கெட் ரத்து செய்தல், பணம் திரும்பப் பெறும் விதிமுறைகள், பிளாட்பார்ம் நிலவரம் போன்றவற்றையும் பெற முடியும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Indian Railways