அறிவியலில் ஆர்வம் மிக்க மாணவர்களுக்கு பயிற்சி அளித்த இஸ்ரோ!

பள்ளி மாணவர்களை விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும் என்று இஸ்ரோ சிவன் ஊக்கப்படுத்தினார்.

Web Desk | news18
Updated: May 18, 2019, 9:06 AM IST
அறிவியலில் ஆர்வம் மிக்க மாணவர்களுக்கு பயிற்சி அளித்த இஸ்ரோ!
மாணவர்களுடன் இஸ்ரோ சிவன்
Web Desk | news18
Updated: May 18, 2019, 9:06 AM IST
நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன்-2 விண்கலம், திட்டமிட்டபடி ஜூலை மாதத்தில் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

அறிவியலில் ஆர்வம் மிக்க மாணவர்களுக்கு பயிற்சி: உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில், பல்வேறு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. இந்நிலையில், அறிவியலில் ஆர்வம் மிக்க அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை, மாநிலத்துக்கு 3 பேர் என 100-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்து முதன் முறையாக இஸ்ரோ ஒரு வார கால பயிற்சி அளித்துள்ளது.

இந்த பயிற்சியில் 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்றனர். ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது. இதன் நிறைவாக, இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகளுடன் பள்ளி மாணவ, மாணவியர் நேற்று கலந்துரையாடினர்.

அப்போது, மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்டோர் விளக்கம் அளித்தனர்.

சந்திராயன்-2 ஜூலையில் விண்ணில் செலுத்தத் திட்டம்:  நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த சிவன், சந்திராயன்-2 விண்கலத்தை ஜூலை மாதத்தில் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாகவும், இதுவரை யாரும் நெருங்காத பகுதிகளை சந்திராயன் 2 விண்கலம் ஆய்வு செய்யும் என்றும் கூறினார்.

சூரியனை ஆராயும் ஆதித்யா எல்.1 செயற்கைக் கோள்: சந்திராயன்-2 விண்கலத்தைத் தொடர்ந்து, அடுத்தகட்ட முயற்சியாக சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா L1 என்ற விண்கலத்தை அனுப்புவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக சிவன் தெரிவித்தார்.

மாணவர்களை விஞ்ஞானிகளாக்க வாழ்த்திய சிவன்: விண்ணில் மிதக்கும் விண்வெளி குப்பைகளை நிரந்தரமாக அகற்றுவதற்கு பல்வேறு வழிகளை இஸ்ரோ ஆய்வு செய்து வருவதாகவும் சிவன் தெரிவித்தார். முன்னதாக, மாணவர்களின் வியக்கத்தக்க கேள்விகளுக்கு பதிலளித்த சிவன், பள்ளி மாணவர்களை விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார். மாணவர்கள் விஞ்ஞானிகள் ஆனதும் தங்களது கனவுகளை திட்டங்களாக்கி நிறைவேற்றவும் அவர் வாழ்த்தினார்.
Loading...
Also see... ரஜினிகாந்த் பேசியதை சுட்டிகாட்டிய தமிழிசை!

Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: May 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626