Home /News /national /

Independence Day 2022 | 75 அல்லது 76? எத்தனையாவது சுதந்திர தினம் இன்று? ஒவ்வொரு வருஷமும் இதே குழப்பம்… இதுதான் விளக்கம்!

Independence Day 2022 | 75 அல்லது 76? எத்தனையாவது சுதந்திர தினம் இன்று? ஒவ்வொரு வருஷமும் இதே குழப்பம்… இதுதான் விளக்கம்!

75th Independence Day | சுதந்திரம் பெற்று இந்த ஆண்டோடு எத்தனை ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன என்பது குறித்தான சந்தேகம் எல்லா ஆண்டும் பலருக்கு ஏற்படும்.

75th Independence Day | சுதந்திரம் பெற்று இந்த ஆண்டோடு எத்தனை ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன என்பது குறித்தான சந்தேகம் எல்லா ஆண்டும் பலருக்கு ஏற்படும்.

75th Independence Day | சுதந்திரம் பெற்று இந்த ஆண்டோடு எத்தனை ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன என்பது குறித்தான சந்தேகம் எல்லா ஆண்டும் பலருக்கு ஏற்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
இந்தியா தனது சுதந்திர தினத்தை உற்சாகத்துடன் இன்று கொண்டாடி வருகிறது. மத்திய அரசால் தொடங்கப்பட்ட ‘ஹர் கர் திரங்கா’ (Har Ghar Tiranga) திட்டத்தின் கீழ், மக்கள் தங்கள் வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றி, தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். எவ்வாறாயினும், ஒவ்வொரு ஆண்டும் நம் கொண்டாட்டத்தின் மத்தியில் எண்ணிக்கை தொடர்பான புதிரை எதிர்கொள்கிறோம். சுதந்திரம் பெற்று இந்த ஆண்டோடு எத்தனை ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன என்பது குறித்தான சந்தேகம் ஆகும்.

விளக்கம்:

பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்து இந்த ஆண்டோடு 75 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், பலருக்கு இந்த ஆண்டு சுதந்திர தினம் 75ஆ? அல்லது 76ஆ? என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

200 ஆண்டுகளுக்கும் மேலான ஆங்கிலேயர் ஆதிக்கத்திற்குப் பிறகு, இந்தியா ஆகஸ்ட் 15, 1947 அன்று நீண்டகாலமாகப் போராடி சுதந்திரம் பெற்றது. அதாவது, 1948-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியா சுதந்திரத்தின் முதல் ஆண்டைக் கொண்டாடியது. அதன் பின்னர், மீண்டும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 15, 1957-ல், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு 1967-ல் என இறுதியாக, எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு 2017-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

இதன் விளைவாக, இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைந்து இந்தாண்டோடு 75 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இந்தியாவில் ஆகஸ்ட் 15, 1947 முதல் கொண்டாடப்பட்ட சுதந்திர தினங்களைக் கணக்கிட்டால், மொத்தம் 76ஆக இருக்கும். இதனாலேயே நாம் நமது 76ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகின்றது என்கிறோம்.

எனவே, இந்தியா தனது 75ஆவது சுதந்திர தினத்தை ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ பிரச்சாரத்துடன் கொண்டாடுகிறது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். ‘பாரத் கி ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ (Bharat ki Azadi Ka Amrit Mahotsav) என்பது முன்னேறும் இந்தியாவின் 75 ஆண்டுகளையும் அதன் வளமான வரலாற்றையும் நினைவுகூரும் வகையில் மத்திய அரசு முன்னெடுத்த பிரச்சாரமாகும்.

மஹோத்சவ் அல்லது இந்த பிரமாண்ட கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சுதந்திரம், இந்தியாவின் மக்கள், கலாச்சாரம் மற்றும் சாதனைகளின் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டாட 75 வாரங்களுக்கு பல நிகழ்வுகள் மற்றும் பிரச்சாரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் பயணம் மார்ச் 12, 2021 அன்று தொடங்கப்பட்டது ஆகும். நம் சுதந்திர இந்தியாவின் 75ஆவது ஆண்டுக்கான 75 வார முடிவு கவுண்ட்டவுன் தற்போது தொடங்கியுள்ளது.
Published by:Archana R
First published:

Tags: Independence day, India, Narendra Modi

அடுத்த செய்தி