Home /News /national /

ஆந்திரா, கர்நாடகாவில் ‘Ugadi’... மற்ற மாநிலங்களில் என்னென்ன பெயர் தெரியுமா.?

ஆந்திரா, கர்நாடகாவில் ‘Ugadi’... மற்ற மாநிலங்களில் என்னென்ன பெயர் தெரியுமா.?

Ugadi 2022

Ugadi 2022

Ugadi 2022 | மகாராஷ்டிரா மக்கள் இந்நாளை ‘குடிபத்வா’ என்ற மராத்தி புத்தாண்டின் தொடக்க நாளாக கொண்டாடுகின்றனர். வண்ணங்களின் திருவிழாவான ஹோலியைத் தொடர்ந்து குடிபத்வா பண்டிகை, 2022 ஏப்ரல் 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது அனைவருக்கும் ஒரு நல்ல மற்றும் அதிர்ஷ்டமான நாளாக கருதப்படுகிறது. குடிபத்வா அல்லது 'சைத்ரா சுக்லா பிரதிபாதா' என்பது சைத்ரா மாதத்தின் முதல் நாளில் வருகிறது.

மேலும் படிக்கவும் ...
தெலுங்கு மற்றும் கன்னட வருடப்பிறப்பை யுகாதி பண்டிகையாக தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். பல மாநிலங்கள், மொழி, கலாச்சாரம் கொண்ட இந்தியாவில் ஒரு மாநிலத்திற்கும், மற்றொரு மாநிலத்திற்கும் பண்டிகையின் பெயர்கள் மாறுபடுகின்றன. தெலுங்கு மக்களால் யுகாதி கொண்டாடப்படுவதைப் போலவே பிற மாநில மக்கள் அந்நாளை என்னவென்று கொண்டாடுகிறார்கள் என அறிந்து கொள்ளலாம்...

யுகாதி பண்டிகை:

சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் யுகாதி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் இந்த பண்டிகை ஏப்ரல் மாத முதல் வாரத்தில் கொண்டாடப்படும். இந்த ஆண்டு உகாதி பண்டிகை ஏப்ரல் 2ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.

யுகம் என்றால் காலம், ஆதி என்றால் ஒன்றின் ஆரம்பம். ஒவ்வொரு புத்தாண்டு தினத்தைப் போலவே, யுகாதியும் அதைக் கொண்டாடும் மக்களின் வாழ்க்கையில் புதிய தொடக்கங்களைக் குறிக்கிறது. வரவிருக்கும் ஆண்டின் மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.



யுகாதி அன்று, மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து கொள்வார்கள். வீட்டில் வண்ணக்கோலம் இடுவார்கள். மாவிலைத் தோரணங்களால் வீட்டை அலங்கரிப்பார்கள். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிசுப் பொருட்கள் கொடுத்தும் வாங்கியும் மகிழ்வார்கள். இந்நாளில் வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் உப்பு ஆகியவை கலந்த தனித்துவமான யுகாதி பச்சடி செய்து விருந்தில் பரிமாறுவார்கள். கோயில்களுக்கு சென்று தெய்வத்தை வழிபடுவது. தெலுங்கு சாகித்ய நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறும்.

Also Read : பயணத்தில் தொலைத்த பையை கண்டுபிடிக்க இண்டிகோ விமான இணையதளத்தை ஹேக் செய்த பொறியாளர்!

 

குடிபத்வா திருநாள்:

மகாராஷ்டிரா மக்கள் இந்நாளை ‘குடிபத்வா’ என்ற மராத்தி புத்தாண்டின் தொடக்க நாளாக கொண்டாடுகின்றனர். வண்ணங்களின் திருவிழாவான ஹோலியைத் தொடர்ந்து குடிபத்வா பண்டிகை, 2022 ஏப்ரல் 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது அனைவருக்கும் ஒரு நல்ல மற்றும் அதிர்ஷ்டமான நாளாக கருதப்படுகிறது. குடிபத்வா அல்லது 'சைத்ரா சுக்லா பிரதிபாதா' என்பது சைத்ரா மாதத்தின் முதல் நாளில் வருகிறது.



திதியின் நேரம் பின்வருமாறு:

பிரதபாதா திதி ஆரம்பம்:- ஏப் 01, 2022 அன்று காலை 11:53 மணி
பிரதிபாதா திதி முடிவு: ஏப். 02, 2022 அன்று காலை 11:58 மணி

இன்றைய தினம் வீட்டிற்குள் அதிர்ஷ்டம் மற்றும் நல்ல விஷயங்களை வரவேற்கும் விதமாக வாசலில் வண்ணமயமான ரங்கோலி கோலமிடப்படும். எண்ணெய் குளியலுக்குப் பிறகு மக்கள் புத்தாடைகளை அணிந்து கொண்டு வாசலில் மூங்கில் குச்சி, மா மற்றும் வேம்பு இலைகள், பட்டு உடைகளால் அமைக்கப்பட்ட ‘குடி’-க்கு பூஜை செய்து வழிபடுவார்கள்.

Also Read : மதுபோதையில் தூங்கி வழிந்த அரசுப்பள்ளி ஆசிரியர்

சேதி சந்த் கொண்டாட்டம்:

சிந்தி இன மக்கள் யுகாதி நாளை `சேதி சந்த்' எனக் குறிப்பிடுகின்றனர். இது சிந்தி இந்துக்களுக்கான சந்திர இந்து புத்தாண்டின் நவராத்திரி நோன்பு தொடக்கத்தைக் குறிக்கும் ஒரு திருவிழா ஆகும். சைத்ர சுக்ல பக்ஷத்தின் முதல் நாளில், அதாவது இந்து நாட்காட்டியின்படி சேத் (சித்திரை) மாதத்தின் தொடக்கத்தில் வருகிறது. இது சில சமயங்களில் இரண்டாம் நாளிலும் நிகழலாம். இது கிரிகோரியன் நாட்காட்டியின்படி மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் அமைகிறது. இது சிந்து இன இந்து மக்களுக்கு வசந்தம் மற்றும் செழிமையை குறிக்கும் நாளாக கருதப்படுகிறது.

சேதி சந்த்: சனிக்கிழமை, ஏப்ரல் 2, 2022
சேதி சந்த் முஹுரத்: மாலை 06:55 மணி முதல் 07:57 மணி வரை
பிரதபாதா திதி தொடங்குதல்: ஏப் 01, 2022 அன்று காலை 11:53 மணி
பிரதிபாதா திதி முடிவடைவது: ஏப் 02, 2022 அன்று காலை 11:58 மணிக்கு



சிந்திகள் பல்வேறு சடங்குகளை நடத்தி நாற்பது நாட்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். இந்த பிரசாதம் சாலிஹோ என்று அழைக்கப்படுகிறது. இதற்கு பிறகு, அவர்கள் செட்டி சந்தின் மாபெரும் விழாவைக் கொண்டாடுகிறார்கள். அவர்களில் பலர் இந்த நாளில் விரதத்தை நடத்தி, பழங்களுடன் சடங்கு பிரசாதங்களை முடித்தவுடன் அதை முறிப்பார்கள். சடங்குகள் பின்வருமாறு செய்யப்படலாம்:

Also Read : 25 வயது இளம்பெண்ணை மணந்த 45 வயது நபருக்கு நேர்ந்த சோகம்!

எண்ணெய் விளக்கு, சர்க்கரைக் கட்டி, ஏலக்காய், பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு ஜூலேலாலின் பிரதிநிதியான பெஹ்ரானா சாஹிப் என்ற உருவத்தை நதி அல்லது ஏரிக்கு எடுத்துச் செல்கின்றனர். மேலும், ஜூலேலால் தேவதையின் சிலையும் கொண்டு செல்லப்படும். அங்கு பெஹ்ரானா சாஹிப்பை தண்ணீரில் மூழ்கடித்து, பல்லவி பாடி இறைவனை சாந்தப்படுத்தி பிரார்த்தனை செய்வார்கள். பின்னர் அங்குள்ளவர்களுக்கு சாலிஹோ என்ற பிரசாதம் வழங்கப்படும். மேலும் இன்றைய தினம் ஆதரவற்றோருக்கு உணவு, உடை வழங்குதல் போன்ற விஷயங்களை செய்வார்கள்.
Published by:Selvi M
First published:

Tags: Festival, India

அடுத்த செய்தி