ஹோம் /நியூஸ் /இந்தியா /

வளர்ச்சிக்காக மாற்றங்கள் தேவை… ஆனால் 'குறவர்' என்பது வேண்டாம்- காரணம் சொல்லும் அரசியல் தலைவர்கள்!

வளர்ச்சிக்காக மாற்றங்கள் தேவை… ஆனால் 'குறவர்' என்பது வேண்டாம்- காரணம் சொல்லும் அரசியல் தலைவர்கள்!

தமிழ் கடவுளான முருகன், குறவர் இனத்தைச் சார்ந்த வள்ளி என்கிற பெண்ணை மணந்ததாக பல வரலாற்றுக் கதைகள் உண்டு. அவை குறவர் என்ற இனம் தொன்றுதொட்டு பூர்வ தமிழ்க்குடி என்பதை காட்டும் சான்றாக உள்ளது என்கிறது வரலாறு.

தமிழ் கடவுளான முருகன், குறவர் இனத்தைச் சார்ந்த வள்ளி என்கிற பெண்ணை மணந்ததாக பல வரலாற்றுக் கதைகள் உண்டு. அவை குறவர் என்ற இனம் தொன்றுதொட்டு பூர்வ தமிழ்க்குடி என்பதை காட்டும் சான்றாக உள்ளது என்கிறது வரலாறு.

தமிழ் கடவுளான முருகன், குறவர் இனத்தைச் சார்ந்த வள்ளி என்கிற பெண்ணை மணந்ததாக பல வரலாற்றுக் கதைகள் உண்டு. அவை குறவர் என்ற இனம் தொன்றுதொட்டு பூர்வ தமிழ்க்குடி என்பதை காட்டும் சான்றாக உள்ளது என்கிறது வரலாறு.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Chennai, India

தங்களின் சமூகமாக நரிக்குறவர்கள் அடையாளப்படுத்தப்படுவதாக அதனை எதிர்த்து தமிழ்நாட்டின் குறவர்கள் கடுமையான எதிர்ப்பை முன்வைத்து வருகின்றனர். மத்திய அரசால் நரிக்குறவர் சமூகம் பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டதை அடுத்து, குறவர் சமூகத்தினர் ‘குறவர்’ என்ற வார்த்தையை நரிக்குறவர் சமூகப் பெயரில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குறவர்கள் யார்?

குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் கூறுகையில், குறவர் சமூகத்தினர் தொன்றுதொட்டு தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள். அதனை குறிக்கும் சான்றாக அவர்கள் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம் போன்ற பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறார்கள் என்று கூறுகிறார்.

குறவர்களின் முதன்மைத் தொழில், மலைப் பகுதிகளில் விவசாயம் மற்றும் ஆடு வளர்ப்பு ஆகியவை. துடைப்பம், பாத்திரங்கள் போன்ற வீட்டுப் பொருட்களை அந்த இனத்தின் பெண்கள் தயாரித்து, மலைகளில் இருந்து இறங்கி, சமவெளிகளில் தங்கள் பொருட்களை விற்று, மாலையில் தங்கள் இடங்களுக்குச் செல்கின்றனர் என்று குறிப்பிடுகிறார்.

குறவர்களை பொறுத்தவரை, அவர்கள்தான் உண்மையான குறவர் சமூகம் என்றும் நரிக்குறவர் ‘குறவர்’ என்ற தலைப்பைப் பயன்படுத்தக் கூடாது என்றும் கோரிக்கையை வைக்கின்றனர். நரிக்குறவர்கள் நாடோடிகள், ஆனால் குறவர்கள் மலைகளில் வாழக்கூடியவர்கள். மேலும், நரிக்குறவர் குருவிகாரர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் மகாராஷ்டிரா போன்ற வடமாநிலங்களை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.

நரிக்குறவர்கள் நரிகள், பறவைகள் மற்றும் பிற சிறிய விலங்குகளை வேட்டையாடுபவர்கள். மணிகள் மற்றும் காடுகள் தொடர்பான பிற பொருட்களை விற்று அதில் பணம் ஈட்டி வாழ்வது அவர்களின் முதன்மை தொழில். ஆனால், காலப்போக்கில், நரிக்குறவர்கள் மலைகள் மற்றும் வனப்பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்று மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டனர் என்று குறவர் மக்கள் கூறுகின்றனர். மேலும், நரிக்குறவர்கள் வாகிரி எனும் மொழி பேசக்கூடியவர்கள், தமிழ் மொழி அல்ல என்று குறிப்பிடுகின்றனர். அதுமட்டுமின்றி, தமிழ்த் திரைப்படங்கள், 1960களின் முற்பகுதியில், குறவர்களை நரிக்குறவர்கள் என்று தவறாகக் காட்டத் தொடங்கி, அது இன்றுவரை தொடர்ந்து வருவதால் நரிக்குறவர் மற்றும் குறவர் இரண்டும் ஒரே சமூகம் என்ற எண்ணம் பொது மக்களிடையே உருவாகியுள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் உண்மையில், அவர்களின் சமூகம் எஸ்டி பிரிவின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்று குறவர்கள் சமூகம் முன்வைக்கும் கோரிக்கை ஆகும்.

தமிழ் கடவுளான முருகன், குறவர் இனத்தைச் சார்ந்த வள்ளி என்கிற பெண்ணை மணந்ததாக பல வரலாற்றுக் கதைகள் உண்டு. அவை குறவர் என்ற இனம் தொன்றுதொட்டு பூர்வ தமிழ்க்குடி என்பதை காட்டும் சான்றாக உள்ளது என்கிறது வரலாறு.

நரிக்குறவர்கள் யார்?

நரிக்குறவர் சமூக நலச்சங்கம் கூறுகையில், குறவர் சமூகம் தங்கள் பெயரில் ஆட்சேபனை எழுப்புவது வருத்தமளிப்பதாக கூறுகிறது. தாங்கள் வடமாநிலங்களைச் சேர்ந்த நாடோடிகள் என்றாலும் பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் என்றும் தமிழில் படிக்கவும், எழுதவும், பேசவும் நன்றாக தெரியும், தமிழ் கலாச்சாரத்துடன் ஒன்றி வாழ்பவர்கள் தாங்கள் என நரிக்குறவர்கள் கூறுகிறார்கள்.

தமிழக பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை கூறுகையில், பலகட்ட கோரிக்கைகளுக்குப் பிறகு நரிக்குறவர் சமூகத்தை எஸ்டி பிரிவின் கீழ் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, நரிக்குறவர் சமூகத்திற்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC) பிரிவில் இருந்து பழங்குடி (ST) பிரிவிற்கு அரசிதழில் இடமாற்றம் செய்யப்படுவதற்கு காத்திருப்பதாக கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது இந்த சமூக மக்கள் 50,000க்கும் மேற்பட்டோர் இருக்கக்கூடும் என்பதால் இவர்களின் கோரிக்கை வலுவாக எட்டப்பட்டுள்ளது என்பது பலரின் கருத்தாக உள்ளது.

மேலும், நரிக்குறவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், தமிழகத்தின் வட மாவட்டங்களில் விவசாயிகள் கம்பு, கேழ்வரகு போன்றவற்றை பயிரிடும்போது குருவிகள் அதை உண்பதற்கு அதிக அளவில் வரும். அப்போது குருவிகள் அவற்றை தாக்காமல் விரட்டுவதற்கு அந்த சமூக மக்களை வேலைக்கு வைத்திருந்ததால் குருவிக்காரர் என்கிற பெயர் வந்தததாக கூறுகிறார். மேலும், தென்தமிழகத்தில் உள்ள விவசாயிகள் கிழங்கு, கரும்பு போன்றவற்றை பயிரிடுவார்கள், கால்நடைகளும் அங்கு அதிகம் இருப்பதால் அவற்றை நரி, கீரி போன்றவை தாக்காமல் தடுக்க தங்களை வேலைக்கு வைத்திருந்ததால் நரிக்குறவர் என்கிற பெயரும் வந்தது. இரண்டு பெயரில் அழைக்கப்பட்டாலும் சமூகம் ஒன்றுதான் என்று கூறுகிறார்.

விவகாரத்தின் பின்னணி என்ன?

குறவர் என அழைக்கப்படும் மலைவாழ் இனத்தவர் ‘குறவர் மக்கள்’. அவர்கள் SC/ST வகைப்பாட்டில் எஸ்சி-இந்து குறவன் என பட்டியலிடப்பட்டுள்ளனர். மிக முக்கியமாக, மலை குறவர் என்று அழைக்கப்படும் மற்றொரு மலைவாழ் பழங்குடியினர் 1900-களுக்கு முன்பே பல தலைமுறைகளாக இந்த சமூக மக்களிடம் பெண் எடுப்பதும் பெண் கொடுப்பதுமாக இருந்துள்ளனர். ஆனால், அவர்கள் எஸ்டி பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால், குறவர்கள் இன்னும் எஸ்டி பிரிவாக அறிவிக்கப்படவில்லை என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.

தமிழகத்தில் குன்றுகள், மலைத்தொடர்களில் பூர்வீக குடிகளாக இருந்த குறவர்கள் ஆங்கிலேய அரசு தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த பல்வேறு வனப்பாதுகாப்பு விதிகளை உருவாக்கி தங்களின் வாழ்வாதாரத்தை நசுக்கிவிட்டதாக கூறுகின்றனர். பிறகு, வாழ்வதற்காக சமவெளிகளுக்குச் சென்று தற்போது ​குறவர்களில் பெரும்பான்மையானவர்கள் தினசரி ஊதியம் பெறுபவர்களாக மாறிவிட்டதாக கூறுகின்றனர்.

நரிக்குறவர் என்ற சமூகப் பெயரில் பழங்குடி பட்டியலில் நரிக்குறவர் மக்களை இணைப்பதற்கு அளிக்கப்பட்ட மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை திரும்ப பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான், வேல்முருகன் போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கருத்தை முன்வைத்துள்ளனர்.

அவர்கள் பொதுவாக முன்வைக்கும் கருத்து- ‘நரிக்காரர் அல்லது குருவிகாரர் என சாதிபெயர் கொண்ட மக்களை தவறுதலாக ‘நரிக்குறவர்’ என்று அழைத்து குறிப்பிட்டு வருபவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து,  நரிக்குறவர், குருவிகாரர் உள்ளிட்ட சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. வடமாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்த மக்களின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றாலும், வேறு சாதிபெயர் கொண்ட மக்களுக்கு ‘நரிக்குறவர்’ என்று பொதுவான பெயரில் சாதிய பட்டியலில் மற்றும் அரசிதழில் குறிப்பிடுவது உண்மையான குறவர் சமூகத்தையும் தமிழர்களின் அடையாளத்தையும் சிதைக்கும்’ என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.

தமிழர்களின் தாய்குடியாக இருக்கும் ‘குறவர்’ என்ற பெயரில் வாகிரி, குருவிகாரர் என உண்மையான பெயர் கொண்ட சமூகத்தினருக்கு ‘நரிக்குறவர்’ என்கிற பெயரில் சாதிச் சான்றுதழ் வழங்குவது குறவர் சமூகத்தின் கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு, பண்பாடு, வரலாறு, கலாச்சாரம் போன்றவற்றை பறிப்பதாக மாறிவிடும் என எச்சரிக்கின்றனர். இது தமிழர்களின் உரிமைகளை பறிக்கும் நிலையாகும் எனவும் கூறுகின்றனர். எனவே, நரிக்குறவர் என்ற சாதி பெயரில் இருந்து ‘குறவர்’ என்ற சொல்லை நீக்கி வாகிரி, குருவிகாரர் ஆகிய உண்மையான சமூக பெயரில் அவர்களை அழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தமிழகத்தின் பெரிய கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் இவ்விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Archana R
First published:

Tags: Seeman, Tamil Nadu, Union Govt