பெண்கள் தனியாக ஆட்டோ, வாடகை காரில் செல்லும் போது ஒரு குறிப்பிட்ட நம்பருக்கு போன் செய்தால், போலீசார் வாகனத்தை ஜி.பி.எஸ் மூலம் கண்காணிப்பார்கள் என்று ஒரு தகவல் பரவி வருகிறது. அது உண்மையா என்று பார்ப்போம்.
பெண்கள் பாதுகாப்பிற்காக போலீசார் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். சமீபத்தில் கூட அம்மா பேட்ரோல் என்று பிரத்யேக ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இரவில் ஆட்டோ, வாடகை காரில் செல்லும் பெண்கள், டிரைவரின் தகவல்களை தெரிந்துகொள்ளும் வண்ணம், டிரைவரின் புகைப்படத்துடன் அடங்கிய விபரங்களை சீட்டின் பின்புறம் ஒட்டிவைக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களும் பெண் பயணிகள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துகின்றன. இந்த நிலையில், பெண்கள் தனியாக ஆட்டோ, வாடகை காரில் செல்லும் போது 9969777888 என்ற நம்பருக்கு போன் செய்தால், போலீசார் வாகனத்தை ஜி.பி.எஸ் மூலம் கண்காணிப்பார்கள் என்று ஒரு தகவல் பரவி வருகிறது.
பேஸ்புக், வாட்ஸப் வழியாக இந்த தகவல் அதிகளவில் பரப்பப்பட்டு வருகிறது. பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விஷயம் என்பதால், பலரும் இதனை சரிபார்க்காமல் பரப்புகின்றனர். ஆனால், இந்த தகவல் உண்மையில்லை.
காவல்துறையினர் இந்த தகவலை மறுத்து செய்தி வெளியிட்டுள்ளனர். மேற்கண்டது போன்ற தகவலை காவல்துறை வெளியிடவில்லை; அந்த எண்ணிற்கு போன் செய்து எந்த தகவலையும் வெளியிட வேண்டாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நீங்கள் இரவில் தனியாக செல்லும் போது ஏதாவது பிரச்னையை எதிர்கொண்டால் 108 என்ற எண்ணுக்கோ, 100 என்ற எண் கொண்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ தகவல் அளிக்கலாம்.
2016-ம் ஆண்டிலேயே இது போன்ற தகவலுக்கு டெல்லி காவல்துறையும் மறுப்பு தெரிவித்து ட்வீட் செய்துள்ளது.
2018-ம் ஆண்டில் பெங்களூரு காவல்துறையும் இந்த நம்பருக்கு போன் செய்தால் வாகனத்தை போலீசார் கண்காணிப்பார்கள் என்ற தகவல் போலியானது என்று ட்வீட் செய்துள்ளனர்.
எனவே, மேற்கண்ட தகவலை யாரும் பரப்ப வேண்டாம். உறுதி செய்யப்படாத, நம்பகத்தண்மை இல்லாத செய்திகளை யாருக்கும் பகிராதீர்கள்.
Also See...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.