Home /News /national /

இந்த போர்டில் இருக்கும் சாலை விதியின் அர்த்தம் உங்களுக்கு தெரியுமா? போக்குவரத்து போலீசார் விளக்கம்

இந்த போர்டில் இருக்கும் சாலை விதியின் அர்த்தம் உங்களுக்கு தெரியுமா? போக்குவரத்து போலீசார் விளக்கம்

இந்த போர்டில் இருக்கும் சாலை விதியின் அர்த்தம் உங்களுக்கு தெரியுமா?

இந்த போர்டில் இருக்கும் சாலை விதியின் அர்த்தம் உங்களுக்கு தெரியுமா?

அண்மையில் ஒரு ட்விட்டர் யூஸர் தான் சாலையில் பார்த்த வித்தியாசமான மற்றும் அசாதாரண ட்ராஃபிக் சைன் ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

    நாட்டிலுள்ள நகரங்கள் முழுவதும் வாகனங்களில் சாலையில் பயணிக்கும் மக்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, போக்குவரத்து காவல் துறையினர் ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளை மேற்கொண்ட பல நிகழ்வுகள் நடந்துள்ளன.

    கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில், பெங்களூரு போக்குவரத்து காவல்துறையின் புதிய முயற்சி பலரது பாராட்டை பெற்றுள்ளது. பெங்களூரு போக்குவரத்து காவல் துறையினர் சோஷியல் மீடியாக்கள் மூலம் புகார்களை பெறுவது மட்டுமல்லாமல், ரோட் சைன்ஸ் (roads signs) மற்றும் பாதுகாப்பு குறித்த சந்தேகங்கள் மற்றும் தெளிவுபடுத்தல்களுக்கும் பொறுப்புடன் பதிலளிக்கின்றனர்.

    அண்மையில் ஒரு ட்விட்டர் யூஸர் தான் சாலையில் பார்த்த வித்தியாசமான மற்றும் அசாதாரண ட்ராஃபிக் சைன் ஒன்றை ஷேர் செய்து கொண்டு, இது என்ன ட்ராஃபிக் சைன் என்று விளக்கத்தை கோரி ட்ராஃபிக் போலீஸை ட்விட்டரில் டேக் செய்தார். மேலும் இது என்ன சாலை விதிக்கான அடையாளம் மற்றும் அதன் பயன்பாடு என்ன என்பதை விளக்குமாறும் போலீசாரிடம் கேட்டார்.

    அனிருத்தா முகர்ஜி என்ற அந்த ட்விட்டர் யூஸர் ஷேர் செய்த இமேஜில் வெள்ளை பின்னணியில், 4 கருப்பு டாட்ஸ்கள் அடங்கிய ரோட் சைன் காணப்பட்டது. சாலையில் வைக்கப்பட்டிருந்த இந்த பலகையை பார்த்த யூஸர் உடனே அதை ஒரு போட்டோவாக க்ளிக் செய்து ட்விட்டரில் ஷேர் செய்து, "இது என்ன போக்குவரத்து சின்னம்? என்று கேள்வி எழுப்பி பெங்களூரு போக்குவரத்து போலீசாரை ( @wftrps @blrcitytraffic) டேக் செய்து உள்ளார். இந்த கேள்விக்கு உடனடியாக பதிலளித்த ஒயிட்ஃபீல்ட் பகுதி போக்குவரத்து காவல்துறையினர், குறிப்பிட்ட சாலை அடையாளத்தின் அர்த்தத்தை பற்றி வெளியிட்டனர். மேலும் இது பார்வையற்றவர்களின் நலன்களுக்காக சாலைகளில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வைக்கப்பட்ட ரோட் சைன் என்று கூறினர்.



    வித்தியாசமான ரோட் சைன் வைக்கப்பட்டுள்ள அந்த இடத்தில் அதாவது ஹோப்ஃபார்ம் ஜங்க்ஷனில் (Hopefarm Junction) பார்வையற்றோர் பள்ளி இருப்பதை குறிப்பிட்டு இந்த போக்குவரத்து பலகை ஒரு எச்சரிக்கை பலகையாகும் என்றும் பதில் அளித்து உள்ளனர். மேலும் இந்த ரோட் சைன் ஒரு பார்வையற்ற நபர் சாலையில் இருக்க கூடும் என்பதைக் குறிக்கிறது, எனவே பயணிகள் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும் என்பதும் அர்த்தமாகும் என்று தங்களது பதிலில் பெங்களூரு போக்குவரத்து காவல்துறையினர் கூறி இருக்கிறார்கள்.

    Also Read : அம்மா பயிற்சி பெற்ற அதே அகடாமியில் பட்டம் பெற்ற மகன் - 27 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த தரமான சம்பவம்!

    போக்குவரத்து காவல்துறையின் பதிலை தொடர்ந்து பல யூஸர்களும் விரைந்து பதிலளித்த போலீசாரின் நடவடிக்கையைப் பாராட்டினர். ஒரு யூஸர் கூறும் போது, “இதுவரை இந்த ரோட் சைனுக்கான அர்த்தம் தெரியாது. எங்களுக்கு சொல்லி கொடுத்ததற்கு நன்றி" என்றார்.

    மற்றொரு யூஸர், பெங்களூரு நகர காவல் துறையினர் போக்குவரத்து அறிகுறிகள் மற்றும் விதிகள் குறித்த தகவல்களை தொடர்ந்து பகிர்ந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும், இது மக்கள் போக்குவரத்து விதிகளை புரிந்து கொள்ள உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Karnataka, Viral

    அடுத்த செய்தி