நிறுவனங்கள், ஊழியர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம்.. சலுகைகள் என்ன தெரியுமா?

நிறுவனங்கள், ஊழியர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம்.. சலுகைகள் என்ன தெரியுமா?

மாதிரிப்படம்

சுமார் 1,000 தொழிலாளர்கள் வரை இருக்கும் EPFO பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் 24 சதவீத ஈபிஎஃப் மானியத்தைப் 2 ஆண்டுகளுக்கு பெறுவார்கள். அதாவது, முதலாளிகளின் பங்கு மற்றும் ஊழியர்களின் பங்கு என தலா 12 சதவீதம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த வாரம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார். இதன் கீழ் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யும் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும். மேலும் ஊழியர்கள் மற்றும் முதலாளிகளின் ஓய்வூதிய நிதி பங்களிப்புக்கான மானியத்தை இரண்டு ஆண்டுகளுக்கு மத்திய அரசு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதாவது, ஊழியர்களின் ஊதிய பங்களிப்பு 12 சதவீதம் மற்றும் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு 12 சதவீதம் என மொத்தம் 24 சதவீத பங்கினை இரண்டு ஆண்டுகள் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக முடங்கிப் போன தொழில்நிறுவனங்களையும், நாட்டின் வேலை வாய்ப்பை உருவாக்கும் தொழில்நிறுவனங்களையும் ஊக்குவிக்கும் நோக்கத்தில் ஊக்கத் தொகை வழங்க இந்த தற்சார்பு வேலை வாய்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இது முக்கியமாக குறைந்த அளவிலான மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களை மையமாகக் கொண்டுள்ளது. அதாவது EPFO-ல் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் மாதாந்திர ஊதியத்தில் ரூ.15,000க்கும் குறைவான வேலையில் சேருபவர்களை நோக்கமாக கொண்டுள்ளது. புதிய ஊழியர்களைத் தவிர, மார்ச் 1 முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை கொரோனா தொற்றுநோய்களின் போது வேலையிழந்தவர்கள் இந்த வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சில குறிப்பிட்ட சலுகைகளை பெறலாம். 

அதேபோல அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அல்லது அதற்குப் பிறகு வேலைக்குச் சேர்ந்த ஈபிஎஃப் உறுப்பினர்களையும் இந்த திட்டம் உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக இந்த ஊழியர்கள் மாத ஊதியம் ரூ.15,000-க்கும் குறைவாக இருக்க வேண்டும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மூலம் வழங்கப்படும் மானியத்திற்கு, மத்திய அரசு சுமார் ரூ.6,000 கோடி செலவிட உள்ளது. இத்திட்டத்தின் படி அனைத்தும் நடந்தால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலைகள் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also read... PUBG, The Return of the Battle Royal game - தெரிந்துகொள்ள வேண்டியவை என்னென்ன?இந்த திட்டத்தின் கீழ், 50 ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் நன்மைகளைப் பெறுவதற்கு குறைந்தபட்சம் இரண்டு புதிய ஊழியர்களை சேர்க்க வேண்டும். அதேபோல, 50 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் குறைந்தபட்சம் ஐந்து புதிய ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும். புதிய ஊழியர்களை பணியமர்த்தும் ஒவ்வொரு EPFO பதிவு செய்யப்பட்ட நிறுவனமும் மானியத்திற்கு தகுதியுடையவை ஆகும். ஆத்மனிர்பர் பாரத் ரோஸ்கர் யோஜனாவின் கீழ் இந்த வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுமார் 1,000 தொழிலாளர்கள் வரை இருக்கும் EPFO பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் 24 சதவீத ஈபிஎஃப் மானியத்தைப் 2 ஆண்டுகளுக்கு பெறுவார்கள். அதாவது, முதலாளிகளின் பங்கு மற்றும் ஊழியர்களின் பங்கு என தலா 12 சதவீதம். அதேபோல, 1,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில் சேர்க்கப்படும் புதிய ஊழியர்களின் 12 சதவீத பங்கை அரசாங்கமே வழங்குகிறது.
Published by:Vinothini Aandisamy
First published: