Home /News /national /

மூத்த குடிமக்களுக்கான சொத்துரிமையை பாதுகாப்பது எப்படி - சட்ட ரீதியான ஆலோசனைகள் இதோ!

மூத்த குடிமக்களுக்கான சொத்துரிமையை பாதுகாப்பது எப்படி - சட்ட ரீதியான ஆலோசனைகள் இதோ!

senior citizens

senior citizens

Property Rights of Senior Citizens | நாங்கள் தான் எதிர்கால வாரிசுகள் என்பதை சுட்டிக் காட்டி, சொத்துகளை பெயர் மாற்றம் செய்து தருமாறு பெற்றோருக்கு பிள்ளைகள் தொந்தரவு அளித்தாலும், முதியோருக்கான சொத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்துகிறது.

மேலும் படிக்கவும் ...
குழந்தைகள் மற்றும் இதர உறவினர்கள் பெயரில் எழுதி வைத்த சொத்துகளில் இருந்து அவர்களை வெளியேற்றி, சொத்துகளை எப்படி திரும்பப் பெற முடியும் என்பது குறித்து மூத்த குடிமக்கள் பலரும் தெரியாமல் இருக்கின்றனர். பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல உறுதிச் சட்டம் கடந்த 2007ஆம் ஆண்டில் நிறைவேற்றம் செய்யப்பட்டு 15 ஆண்டுகள் ஆகியும் கூட, அதுகுறித்து பலரும் தெரியாமல் இருக்கின்றனர்.

குழந்தைகளுக்கு சொத்துகளை மாற்றம் செய்வது.?

தங்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் உடல் ரீதியான தேவைகளை நிறைவேற்றுவார்கள் என்ற உறுதியின் பேரில் பிள்ளைகளுக்கு சொத்துகளை பெயர் மாற்றம் செய்ய அல்லது பரிசளிக்க மூத்த குடிமக்களுக்கு உரிமை உண்டு. அதே சமயம், கொடுத்த வாக்குறுதியை பிள்ளைகள் நிறைவேற்றவில்லை என்றால், உடனடியாக இதற்கான தீர்ப்பாயத்தை அணுகி சொத்து பெயர் மாற்றம் செல்லாது என அறிவிக்குமாறு முதியவர்கள் கோரிக்கை வைக்கலாம்.

சொத்துகளை திரும்பப் பெறுவது :

சொத்துகளை பரிசாக வழங்குவது அல்லது பெயர் மாற்றம் செய்வதற்கான பத்திரத்தில், பிள்ளைகள் தன்னை பராமரித்து, பாதுகாக்க வேண்டும் என்ற நிபந்தனையை மூத்த குடிமக்கள் சேர்க்க வேண்டும். இதை அவர்கள் நிறைவேற்றவில்லை என்றால் தீர்ப்பாயத்தை அணுகி அந்த சொத்துகளை அவர்கள் திரும்பப் பெறலாம்.

தன்னை பராமரிப்பது தொடர்பான நிபந்தனையை சேர்ப்பது சட்ட ரீதியாக கட்டாயமில்லை. நிபந்தனை இல்லாமலேயே பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றாலும், பத்திரங்களில் அந்த நிபந்தனையை சேர்த்துக் கொள்வது நல்லது.



பிள்ளைகளை சொத்துகளில் இருந்து வெளியேற்றுவது

பிள்ளைகளை சொத்துகளில் இருந்து வெளியேற்றுவதற்கான அதிகாரத்தை முதியோர் சொத்துரிமை பாதுகாப்புச் சட்டம் வழங்கவில்லை. ஆனால், தங்களை தொந்தரவு செய்தால் அல்லது பராமரிக்கவில்லை என்றால், பிள்ளைகள் அல்லது உறவினர்கள் பெயரில் வழங்கிய சொத்துகளை முதியவர்கள் திரும்பப் பெறுவதற்கு உச்ச நீதிமன்றம் மற்றும் இதர நீதி அமைப்புகள் ஆதரவு தருகின்றன.

Also Read : பென்சன் பெறுபவர்கள் கூடுதல் உதவித்தொகை கிடைக்க இதை செய்யுங்கள்!

நாங்கள் தான் எதிர்கால வாரிசுகள் என்பதை சுட்டிக் காட்டி, சொத்துகளை பெயர் மாற்றம் செய்து தருமாறு பெற்றோருக்கு பிள்ளைகள் தொந்தரவு அளித்தாலும், முதியோருக்கான சொத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்துகிறது.

Also Read : வாரிசுதாரரை நியமிக்காவிட்டால் வங்கி டெபாஸிட் திரும்ப பெறுவதில் சிக்கல்!

முதியோர் உரிமைகளைப் பாதுகாப்பது

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் (2005) இன் கீழ், பெண்களுக்கான பாதுகாப்பு என்ற பெயரில், பெண்கள் சொத்துகளில் இருந்து வெளியேற்றப்படுவதை தடுப்பது தொடர்பான விஷயங்கள் மற்றும் முதியோர் சொத்துரிமை விதிகள் ஆகிய இரண்டுமே பாதிக்காத வண்ணம் சீரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆகவே, சொத்துகளில் இருந்து வெளியேறுமாறு மருமகள் அறிவுறுத்தப்படும் பட்சத்தில், முதியோர் சொத்துரிமை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரது உரிமைகள் பாதிக்கப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
Published by:Selvi M
First published:

Tags: India, Law, Property

அடுத்த செய்தி