நாடு முழுவதும் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, குழந்தைகளுக்கு ஏற்ற அளவுகளில் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் தலைகவசங்களை தயாரிக்கும்படி ஹெல்மெட் தயாரிப்பாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது, 40 கி.மீ. வேகத்திற்கு மேல் வண்டியை ஓட்டக்கூடாது என்றும், விதிகளை மீறினால் ரூ.1000 அபராதம் அல்லது 3 மாதம் ஒட்டுனர் உரிமர் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் மூலம் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த புதிய விதி, அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஓராண்டு கழித்து அமலுக்கு வரும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
Must Read : தேர்தல் முடிந்ததும் நல்ல அறிவிப்பு வெளியிட உள்ளேன்.. முதல்வர் ட்விஸ்ட்... என்னவா இருக்கும்?
இது தொடர்பாக 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் மக்களின் கருத்தை கேட்க ஒரு வரைவு அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்ட விதி 2023 பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.